'தல 55' படக்குழுவுக்கு வில்லனுடன் சேர்ந்து பிரியாணி சமைத்து பரிமாறிய அஜீத்

By Siva

சென்னை: தல 55 படக்குழுவினருக்கு அஜீத் இம்முறை தனியாக இல்லை அருண் விஜய்யுடன் சேர்ந்து பிரியாணி செய்து பரிமாறியுள்ளார்.

அஜீத் குமார் நடிப்பில் மட்டும் தேர்ந்தவர் அல்ல. பிரியாணி செய்வதிலும் தான். தான் நடிக்கும் படங்களில் பணிபுரியும் நபர்களுக்கு தன் கையாலேயே பிரியாணி செய்து பரிமாறுவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.

அதனால் தல படம் என்றால் படக்குழுவினருக்கு நிச்சயம் பிரியாணி விருந்து உண்டு.

தல 55

தல 55

அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் த்ரிஷா, அனுஷ்காவுடன் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறோமே.

ஹீரோ-வில்லன்

ஹீரோ-வில்லன்

ஹீரோவாக நடித்து வரும் அருண் விஜய் தல 55 படத்தில் அஜீத்தின் வில்லனாக நடிக்கிறார். படத்தில் மட்டும் தாங்க அவர்கள் மோதுகிறார்கள். நிஜத்தில் நல்ல நட்புடன் உள்ளனர்.

பிரியாணி

பிரியாணி

'தல' பிரியாணி செய்து கொடுப்பார் என்ற படக்குழுவின் நம்பிக்கை வீண் போகவில்லை. அவர்கள் எதிர்பார்த்தது போன்றே சுவையான பிரியாணியை அஜீத் தனியாக செய்யவில்லை அருண் விஜய்யோடு சேர்ந்து சமைத்து பரிமாறியுள்ளார்.

பார்த்தியா?

பார்த்தியா?

'தல' பிரியாணி செய்து கொடுத்ததை நேரில் பார்த்து போன்று சொல்கிறீர்களே என்று நினைக்கிறீர்களா?. நாங்கள் பார்க்கவும் இல்லை, ருசிக்கவில்லை. பிரியாணியை ரசித்து ருசித்து சாப்பிட்ட த்ரிஷா தான் இது குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ட்வீட்

ஷெஃப் அஜீத் மற்றும் ஷெப் விஜய் ஆகியோர் படக்குழுவினரின் அபார பசியை போக்கியதற்கு நன்றி. நல்லவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் என்று த்ரிஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

த்ரிஷா

த்ரிஷா

த்ரிஷாவுக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். பிரியாணியை பார்த்தால் மட்டும் டயட்டை எல்லாம் மறந்து மூக்குபிடிக்க சாப்பிடுவார் என்று செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

தல பிரியாணிக் கடை

தல பிரியாணிக் கடை

அஜீத் குமார் மட்டும் 'தல பிரியாணிக் கடை' ஒன்று திறந்தார் என்றால் வியாபாரம் அள்ளும் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X