twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரசிகர்கள் மேல தான் அஜித்துக்கு எவ்ளோ அக்கறை.. அமிதாப் செய்த தப்பை நேர்கொண்ட பார்வைல சரி செஞ்சுட்டாரே

    பிங்க் படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் நேர்கொண்ட பார்வையில் சில மாற்றங்களை செய்துள்ளனர்.

    |

    Recommended Video

    நேர்கொண்ட பார்வை பட ப்ரோமோ-வீடியோ

    சென்னை: இந்தியில் அபிதாப் செய்த தவறை தமிழில் செய்யாமல் அஜித் தவிர்த்திருப்பது, ரசிகர்கள் மேல் அவர் வைத்துள்ள அக்கறையை காட்டுகிறது.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. இந்தியில் ஹிட்டான பிங்க் படத்தை தமிழில் இயக்கியிருப்பவர் எச்.வினோத்.

    வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் உலககெமங்கும் நாளை வெளியாகிறது. இதையொட்டி சிங்கப்பூரில் நேற்று பிரிமியர் ஷோ திரையிடப்பட்டது. சென்னையில் செய்தியாளர்களுக்காக பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது.

    என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா... கேப்மாரியும் 50 மும்பை அழகிகளும் என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா... கேப்மாரியும் 50 மும்பை அழகிகளும்

    மாற்றங்கள்:

    மாற்றங்கள்:

    பிங்க் படத்தின் ஜீவன் மாறாமல் அதை தமிழில் எடுத்திருக்கிறார் வினோத். அஜித் ரசிகர்களுக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதன் பாதியில் ஒரு ஸ்டண்ட் காட்சியும், இரண்டாம் பாதியில் ஒரு பாடல் காட்சியும் சேர்க்கப்பட்டுள்ளது.

    நச் க்ளைமாக்ஸ்:

    நச் க்ளைமாக்ஸ்:

    அதேபோல க்ளைமாக்ஸ் காட்சியிலும் சில விஷயங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. பாலியல் உறவு கொள்ள ஒரு பெண், வேண்டாம் என மறுத்துவிட்டால், அவள் ஒரு விலைமகளாக இருந்தாலும் கூட வற்யுறுத்தக் கூடாது என்பது தான் படம் சொல்லும் சேதி. இதை அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

    விமர்சனம்:

    விமர்சனம்:

    பிங்க் படத்தின் கருத்தியலை பாதிக்காத வகையில், இன்றைய இளம் தலைமுறை பெண்களின் நவீன கலாச்சாரத்திற்கு வக்காலத்து வாங்குகிறது படம். இதுபற்றி நிறைய மாற்றுக் கருத்துகளும் வருகின்றன. படத்தில் சில வசனங்கள் மற்றும் காட்சிகள் அடல்ட்ஸ் ஒன்லி வகையறாவாக உள்ளது. எனவே இதை குடும்பச் சித்திரமாக வகைப்படுத்த முடியாது.

    அஜித்துக்கு பாராட்டு:

    அஜித்துக்கு பாராட்டு:

    இத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் அஜித் செய்த ஒரு செயலை நாம் பாராட்டியே தீரவேண்டும். இந்தி படத்தின் கதைப்படி வழக்கறிஞராக வரும் அபிதாப் ஒரு குடிகாரர். சதா குடித்துக்கொண்டே இருப்பார். கிட்டத்தட்ட பிரியங்கா படத்தில் வக்கீல் பிரபு வருவாரே அதுபோல். அதைத்தவிர அவருக்கு வேறு எந்த பிரச்சினையும் இருக்காது.

    நோயாளி:

    நோயாளி:

    ஆனால் இந்த படத்தில் அஜித் குடிகாரர் இல்லை. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி. இதற்காக தான் அஜித்தை பாராட்ட வேண்டும் என்கிறேன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்துக்கு பெரும் ரசிகர் படையே உள்ளது. குடிகாரராக தன்னைக் காட்டிக்கொண்டால், தனது ரசிகனும் குடிப்பதை தவறாக எண்ண மாட்டான். மேலும், தன்னை பார்த்து குடிக்காதவன் கூட குடிக்க ஆரம்பித்துவிடுவேன். இதை எல்லாம் யோசித்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் அஜித்.

    அழுத்தமான கதாபாத்திரம்:

    அழுத்தமான கதாபாத்திரம்:

    அதே சமயம் அந்த வழக்கறிஞரின் கதாபாத்திரத்திற்கு ஒரு அழுத்தம் தர வேண்டும். எனவே, குடிகாரன் என்பதைவிட மனநோயாளி என்பது எத்தனையோ மேலானது என அஜித் யோசித்துள்ளார். இதுதான் அவரது வெற்றிக்கு காரணம். ரசிகர்கள் மீது தேவையில்லாத விஷயங்களை திணிக்க வேண்டாம் என அவர் தீர்மானித்திருப்பது வரவேற்க வேண்டிய, பாராட்ட வேண்டிய நற்செயல்.

    பெரிய விசயம் தல:

    பெரிய விசயம் தல:

    இப்படத்தில் மட்டுமல்ல, அதற்கு முந்தைய சில படங்களிலும் அஜித் இதனை செய்ய ஆரம்பித்து விட்டார். ஆனாலும் ஒரு ரீமேக் படத்தில் தனது கதாபாத்திரத்தினை ரசிகர்களுக்காக இப்படி மாற்றி இருப்பது உண்மையில் பெரிய விசயம். மற்ற ஹீரோக்களும் இதை பின்தொடர்ந்தால், அவர்களது ரசிகர்களின் குடும்பங்கள் சந்தோசப்படும்.

    English summary
    In Nerkonda Parvai movie, Ajith's character is mentally depressed person. Whereas in its original, Amitabh will be a alhoholic addict. Everyone Should appreciate Ajith for not doing the same boozed character in the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X