Ajith's New Record:50 ஆண்டுகளில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை செய்த அஜித்
Recommended Video

சென்னை: கடந்த 50 ஆண்டுகளில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை செய்துள்ளார் அஜித்.
அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள விஸ்வாசம் படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு ஜகமல்லா என்ற பெயரில் விரைவில் வெளியாக உள்ளது.
முன்னதாக அஜித்தின் விவேகம் படமும் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட முதல் வேற்று மொழி படம் விவேகம் ஆகும்.

படங்கள்
கர்நாடகாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி படங்கள் ரிலீஸாகி வருகின்றன. ஆனால் எந்த படமும் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகவில்லை. இவ்வளவு ஏன் பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்கள் கூட கன்னடத்தில் டப் செய்யப்படவில்லை.

விவேகம்
விவேகம் படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு கமாண்டோ என்ற பெயரில் வெளியானதுடன் ஹிட்டும் ஆனது. விவேகம் டப் செய்யப்பட்டதற்கு கன்னட அமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதையும் தாண்டி படம் வெற்றி பெற்றது.

என்னை அறிந்தால்
அஜித் நடித்த ஆரம்பம் மற்றும் என்னை அறிந்தால் ஆகிய படங்களும் கன்னடத்தில் டப் செய்து வெளியிடப்பட்டன. அஜித்தின் மூன்று படங்கள் வரிசையாக டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில் நான்காவது படமும் ரிலீஸாக உள்ளது.

சாதனை
தொடர்ந்து 4 படங்கள் கன்னடத்தில் டப் செய்து வெளியாவது பெரிய விஷயம். அஜித்தின் இந்த சாதனையை கடந்த 50 ஆண்டுகளில் எந்த நடிகரும் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











