அஜித் வீட்டில் அடுத்த ஹீரோயின் ரெடியா?.. ட்ரெண்டாகும் ஏகே மகள் அனௌஷ்கா வீடியோ
சென்னை: அஜித் கடைசியாக துணிவு படத்தில் நடித்தார். அதற்கு அடுத்து விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கோலிவுட்டின் கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவர் மகிழ் திருமேனி என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. தற்போது அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதேசமயம் இப்போது அவர் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது.
கோலிவுட்டில் அதிகம் வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் ஒருவர் அஜித்குமார். ஏகே என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் கடைசியாக துணிவு படத்தில் நடித்தார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் திரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். துணிவு படம் எப்படி ஹிட் ஆனதோ அதேபோன்றொரு வெற்றியை கண்டிப்பாக விடாமுயற்சி திரைப்படமும் பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அஜித்குமார்.

விடாமுயற்சி?: அதேபோல் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்ததைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக எங்கு ஷூட்டிங் நடக்கும் என்று கேள்வி எழுந்தது. அதன்படி ஒன்று சென்னையில் செட் போட்டு படமாக்குவார்கள் இல்லை ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டிக்கு செல்வார்கள் என்றும்; படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர மகிழ் திருமேனி முழு மூச்சோடு வேலை செய்துவருவதாகவும் ஒரு பேச்சு ஓடியது. ஆனால் ஷூட்டிங் தொடங்கவே இல்லை.
விரைவில் ஷூட்டிங்: இதற்கிடையே அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டானார். அதன் ஷூட்டிங்கும் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால்தான் நம்ப முடியும்.
போல்டு அஜித்: திரைத்துறையில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அதில் பயணப்பட்டுக்கொண்டிருப்பவர் அஜித். பத்திரிகையாளர்களை சந்திக்கமாட்டார், ரசிகர்களை சந்திக்கமாட்டார், பட ப்ரோமோஷன்களில் கலந்துகொள்ளமாட்டார். இவை அனைத்துக்கும் பட தயாரிப்பு நிறுவனம் ஓகே சொன்னால்தான் படத்தில் நடிக்கவே ஒத்துக்கொள்வார். இதனாலேயே அஜித்துக்கான மவுசு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது.
மகள் வீடியோ: அஜித்துக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் அனௌஷ்கா தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் அவர் சில உடைகளை எடுத்துக்கொண்டு செல்கிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்; அட அஜித் வீட்டிலிருந்து இன்னொரு ஹீரோயின் ரெடியா என்று கேட்டு அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











