அஜித் மகள் அனோஷ்கா பிறந்தநாள்.. வாழ்த்து தெரிவித்த விஜய் ரசிகர்கள்!
சென்னை: அஜீத்தின் மகள் அனோஷ்காவின் பிறந்த நாளுக்கு, வாழ்த்து தெரிவித்துள்ள விஜய் ரசிகர்கள், அனோஷ்காவுடன் விஜய் விளையாடும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
அஜித் ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்று இரு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களின் மூத்த குழந்தையான அனோஷ்காவிற்கு இன்று பிறந்த நாள் ஆகும். இதை அறிந்த அஜித் ரசிகர்கள் அனைவரும் அனோஷ்காவிற்கு வாழ்த்து கூறி சமூக வலைத்தளங்களை தங்களின் அன்பால் நிரப்பி வருகின்றனர் .

அஜித் ரசிகர்களை தவிர்த்து விஜய் ரசிகர்களும் பாசத்தை பொழிந்து வருகிறார்கள் என்றே சொல்லலாம். அஜித் மகள் அனோஷ்காவுடன் விஜய் விளையாடும் புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் பதிவேற்றி அனோஷ்காவிற்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். அஜித் விஜய் ரசிகர்கள் மற்ற விசயங்களில் அடித்து கொண்டாலும் இந்த விசயத்தில் ஒன்றிணைவது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்து இருக்கிறது .

விஜய் மற்றும் அஜித் வெவ்வேறு துருவங்களில் பயணித்து இருந்தாலும் , அவர்கள் பல இடங்களில் குடும்பத்துடன் சந்தித்து இருக்கிறார்கள் விஜய் அஜித்திற்கு பரிசு எல்லாம் வழங்கி இருக்கிறார் அந்த புகைப்படங்கள் அனைத்தும் பல நேரங்களில் அவரவர்களின் பிறந்தநாளின் போது சமூகவளைத்தலங்களில் வலம் வரும் .

அஜித் தற்போது ஹெச் .வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார் .

அஜித்திற்கு கடந்த ஆண்டு விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களுமே நல்ல வெற்றியை பதிவு செய்தது . 2020ல் வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











