அஜித்தின் இறுதி முடிவு... மோதி பார்க்க ரெடியான லைகா... தயங்கும் மகிழ் திருமேனி!

சென்னை: பொங்கல் ஸ்பெஷலாக வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் 300 கோடிகளுக்கும் மேல் வசூலித்தது.

இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அவரது 62வது படத்தை லைகா தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பே இன்னும் வெளியாகாத நிலையில், அதன் ரிலீஸ் தேதியை அஜித் முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

 அஜித்தின் ஏகே 62

அஜித்தின் ஏகே 62

அஜித் நடிப்பில் அ வினோத் இயக்கிய துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டிய துணிவு, அஜித்தின் மார்க்கெட்டை ரீ-ஓபன் செய்துள்ளது. இதனால், அடுத்து நடிக்கவிருக்கும் ஏகே 62 படத்திற்காக அல்டிமேட்டாக ரெடியாகி வருகிறார் அஜித். லைகா தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் அதிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

 அஜித்தின் இறுதி முடிவு

அஜித்தின் இறுதி முடிவு

அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. வலிமை படத்தில் ஃபேமிலி செண்டிமென்ட் வேண்டும் என வினோத்திடம் அஜித் தான் கண்டீஷன் போட்டிருந்தாராம். ஆனால், அது சக்சஸ் ஆகவில்லை என்பதால், துணிவு படம் முழுக்க ஆக்‌ஷன் ட்ரீட்டாக கொடுத்து அஜித்துக்கு எனர்ஜி கொடுத்தார் வினோத். தற்போது அதே பார்முளாவில் தான் ஏகே 62 படமும் இருக்க வேண்டும் என மகிழ் திருமேனிக்கு ஆர்டர் போட்டுள்ளாராம் அஜித்.

 ரெடியான லைகா

ரெடியான லைகா

அதேபோல், விஜய்யின் லியோ படத்துடன் ஏகே 62-வையும் களமிறக்க வேண்டும் என்பதிலும் அஜித் உறுதியாக இருக்கிறாராம். பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசு படத்துடன் மோதிய துணிவு, அஜித்தே எதிர்பார்க்காத ஹிட்டை கொடுத்தது. அதே வைப்ரேஷனில் லியோவுக்கு எதிராக ஏகே 62 ரிலீஸானால் சிறப்பான சம்பவமாக இருக்கும் என அஜித் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதற்கு லைகாவும் முடிந்த வரை முயற்சி செய்துவிடலாம் என ஓக்கே கூறியுள்ளதாம்.

 தயக்கத்தில் மகிழ் திருமேனி

தயக்கத்தில் மகிழ் திருமேனி

ஏகே 62 ஸ்பை திரில்லர் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. கதை, திரைக்கதை ரெடியாகிவிட்டாலும், அஜித்தின் கண்டீஷன் தான் மகிழ் திருமேனியை யோசிக்க வைத்துள்ளதாம். எப்போதுமே பார்த்து பார்த்து தனது படங்களை இயக்கும் மகிழ் திருமேனி, அவசர கதியில் ஏகே 62-வை முடிக்க முடியுமா என அவரது டீமுடன் ஆலோசித்து வருகிறாராம். இந்தப் படத்தில் அஜித்துடன் அருண் விஜய், அதர்வா, பிக் பாஸ் கவின், ஜான் கெக்கென் ஆகியோரும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் கமிட் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X