Ajith Dhanush: அஜித், தனுஷ் காம்போவில் ரியல் கேங்ஸ்டர் மூவி..? செல்வராகவன் பண்ண பெரிய மிஸ்டேக்!
சென்னை: ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் பரத்.
செல்லமே, வெயில், எம் மகன் உட்பட 50 படங்களில் நடித்துள்ள பரத், முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அஜித், தனுஷ் காம்போவில் உருவாகவிருந்த கேங்ஸ்டர் படம் குறித்து அவர் பேசியது வைரலாகி வருகிறது.
இந்தப் படத்தை செல்வராகவன் இயக்கவிருந்தது பற்றியும் பரத் பல தகவல்களை தெரிவித்துள்ளார்.

அஜித், தனுஷ் காம்போவில் கேங்ஸ்டர் மூவி: பரத்தின் 50வது படமான லவ் கடந்த மாதம் வெளியானது. ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பரத். 20 ஆண்டுகளில் 50 படங்களில் நடித்துள்ள பரத்துக்கு இப்போது வரையிலும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செல்லமே, காதல், வெயில், எம் மகன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் பரத்தின் 50வது படமான 'லவ்' வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அந்தப் படத்தின் ப்ரோமோஷனில் தனது கேரியர் குறித்து மனம் திறந்து பேசியிருந்தார் பரத். அதேபோல் தற்போது பிரபல யூடியூப் தளத்துக்கு கொடுத்த பேட்டியில், அஜித் - தனுஷ் காம்போவில் உருவாகவிருந்த படம் குறித்தும் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அண்ணன், தம்பிகளான செல்வராகவன், தனுஷ் கூட்டணி துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தியது. இதனால் இக்கூட்டணியில் உருவாகும் படங்கள் மீது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. புதுப்பேட்டை வெற்றிக்குப் பின்னர் அதன் 2ம் பாகம் உருவாகும் எனவும் சொல்லப்பட்டது. அப்போதுதான் அஜித், தனுஷ், பரத் ஆகியோர் நடிப்பில் படம் இயக்கவிருந்தாராம் செல்வராகவன்.

இந்தப் படத்திற்கு இயக்குநர் செல்வராகவன் 'காசிமேடு' என டைட்டில் கன்ஃபார்ம் செய்து வைத்திருந்ததாகவும் பரத் கூறியுள்ளார். கேங்ஸ்டர் ஜானரில் உருவாகவிருந்த இந்தப் படத்தில் தனக்கும் ஒரு முக்கியமான கேரக்டர் இருந்ததாகவும், அதில் நடித்திருந்தால் எனது கேரியரே மாறியிருக்கும் என்றும் பரத் கூறியுள்ளார். அஜித், தனுஷ் இருவரும் ஒரே படத்தில் நடிப்பதே அபூர்வமான விஷயம்.
ஆனால், அவர்களை வைத்து கேங்ஸ்டர் ஜானரில் படம் இயக்க வேண்டும் என செல்வராகவன் பிளான் செய்திருந்தது, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஒருவேளை இந்தப் படம் உருவாகியிருந்தால் அது கோலிவுட்டின் ரியல் பிளாக் பஸ்டராக இருந்திருக்கும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போன பரத்தை விடவும் ரசிகர்கள் தான் இப்போது அதிக கவலையில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











