அஜித் உதவவில்லை, இதை ரோஜா ரமணனின் ஆன்மாவே மன்னிக்காது: இலக்கியன் பரபர புகார்
Recommended Video

சென்னை: ரோஜா ரமணனுக்கு அஜித் பெரியதாக பண உதவி செய்யவில்லை என்று இலக்கியன் தெரிவித்துள்ளார்.
அஜித்தின் பிறந்தநாளான நேற்று இயக்குனர் சுசீந்திரன் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் தனது நண்பரான ரோஜா ரமணனின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அஜித் பெரிய தொகையை அளித்ததாக கூறினார்.
முகம் தெரியாத தொழிலாளிக்கு கூட அஜித் உதவினார் என்று அவரை பாராட்டியிருந்தார் சுசீந்திரன்.

இலக்கியன்
அஜித்தை பாராட்டி சுசீந்திரன் போட்டை ட்வீட்டை எடுத்து இது சுத்தப் பொய் என்று திரைத்துறையை சேர்ந்த இலக்கியன் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அஜித்
இந்த செய்தி முற்றிலும் பொய். இதை ரோஜா ரமணனின் ஆன்மாவே மன்னிக்காது.. அஜித்திடம் பேசியது நான்.. அஜித் சார் அந்த சமயத்தில் பெரியதாக ஒரு பண உதவி செய்யவில்லை...அஜித் சாரிடம் கால்ஷீட் வாங்கவே அஜித் சாரை பற்றி சுசீந்திரன் தொடர்ந்து தவறான தகவலை பரப்பி வருகிறார்..பி.கு : இது நடந்த சமையம் ஜனா பட சூட்டிங் கிடையாது.. Villan பட சூட்டிங் என்று இலக்கியன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி
சுசீந்திரன் போட்ட ட்வீட்டை அஜித் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வந்தனர். இந்நிலையில் இலக்கியன் கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விளக்கம்
இலக்கியன் சொல்வது உண்மையா இல்லையா என்பது குறித்து சுசீந்திரன் தான் விளக்கம் அளிக்க வேண்டும். அஜித் எத்தனையோ பேருக்கு உதவி செய்துள்ள நிலையில் இப்படி ஒரு விஷயம் கிளம்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











