Ajith: மீண்டும் அஜித்தை டார்கெட் செய்த ஏஆர் முருகதாஸ்... இந்த முறை கூட்டணி கன்ஃபார்ம்!

சென்னை: அஜித் குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

அதன்பின்னர் அஜித் நடிக்கவுள்ள ஏகே 63 திரைப்படம் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன்படி, இப்படம் மூலம் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் - அஜித் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

மீண்டும் இணையும் அஜித் - ஏஆர் முருகதாஸ் கூட்டணி:அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் கடந்த பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. இதனைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டானார் அஜித். ஆனால், இந்தப் படத்தை இயக்கவிருந்த விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக தற்போது மகிழ் திருமேனி இணைந்துள்ளார். இதனையடுத்து ஏகே 62 டைட்டில் 'விடாமுயற்சி' என்பது மட்டும் அறிவிக்கப்பட்டது.

 Ajith: Director AR Murugadoss Is Planning To Team Up With Actor Ajith Kumar

ஆனால், இன்னும் படப்பிடிப்பே தொடங்காத நிலையில், விடாமுயற்சி அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதேநேரம் ஜூலை மாதம் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு உலகம் முழுவதும் பைக் டூர் செல்ல திட்டமிட்டுள்ளார் அஜித். அதனை முடித்துவிட்டு தான் அடுத்த படம் குறித்து அஜித் முடிவெடுப்பார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில், அஜித்துடன் மீண்டும் இணைவதற்காக ரெடியாக காத்திருக்கிறாராம் இயக்குநர் ஏஆர் முருகதாஸ். தீனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏஆர் முருகதாஸ். அஜித் கொடுத்த வாய்ப்பில் இயக்குநராக அறிமுகமான ஏஆர் முருகதாஸ், தீனா படத்திற்குப் பின்னர் தொடர்ந்து பிளாக் பஸ்டர் படங்களாக இயக்கினார். ரமணா, கஜினி, கத்தி, துப்பாக்கி என இன்னும் சில படங்களைக் கூறலாம்.

ஆனாலும் ஏஆர் முருகதாஸுக்கு தற்போது சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவரது படங்கள் தொடர்ச்சியாக கதை திருட்டு பஞ்சாயத்தில் சிக்குவது தான் இதற்கெல்லாம் காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் தான் அஜித்தும் ஏஆர் முருதாஸ் உடன் மீண்டும் இணைய ஆர்வம் காட்டாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது இக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் அஜித்தை சந்தித்த ஏஆர் முருகதாஸ், அவருக்காகவே செம்மையான ஆக்‌ஷன் ஜானர் கதையை கூறியுள்ளார். அதனைக் கேட்டு அஜித்தும் ஓக்கே சொல்லிவிட்டதாக தெரிகிறது. ஆனால், படம் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர் தான் அஜித் - ஏஆர் முருகதாஸ் கூட்டணி இணையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X