Ajith: "அஜித்துக்கு ஒரு பயங்கரமான ஸ்க்ரிப்ட் ரெடி..” ரூட்டு மாறும் விஜய்யின் அன்புத் தம்பி அட்லீ!!

சென்னை: அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலித்தது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியானது ஜவான்.
இதனால், அட்லீயின் அடுத்தப் படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

 Ajith: Director Atlee has prepared a Super story for Ajith

இந்நிலையில், அஜித் சாருக்காக ஒரு பயங்கரமான ஸ்க்ரிப்ட் இருப்பதாக அட்லீ கூறியுள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

விரைவில் அஜித் - அட்லீ காம்போ
ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அட்லீ, அதன்பின்னர் தளபதி விஜய்யுடன் அடுத்தடுத்து 3 படங்களில் இணைந்தார். தெறி, மெர்சல், பிகில் என விஜய் - அட்லீ கூட்டணியில் வெளியான இந்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தன. இதனால் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானிடம் இருந்து அட்லீக்கு வாய்ப்புத் தேடி வந்தது.

அதன்படி, முதன்முறையாக பாலிவுட் சென்ற அட்லீ, ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கினார். இந்தியில் அறிமுகமான முதல் படத்திலேயே ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து காட்டியுள்ளார் அட்லீ. இதனால், அட்லீயின் அடுத்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது. விஜய்யின் அன்புத் தம்பியான அட்லீ, மீண்டும் தளபதியுடனே இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68ல் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் உடன் இணையலாம் என சொல்லப்படுகிறது. இதனிடையே விஜய் - ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க கதை ரெடி செய்து வருவதாக அட்லீ கூறியுள்ளார். அதேபோல், ஹாலிவுட்டில் இருந்தும் அவருக்கு அழைப்பு வருவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்காக ஒரு பயங்கரமான கதை ரெடி செய்து வைத்திருப்பதாக அட்லீ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி தனது சமீபத்திய பேட்டியில் பேசியிருந்த அட்லீ, அஜித் சாருக்காக ஒரு பயங்கரமான ஸ்க்ரிப்ட் எழுதி வைத்துள்ளேன். அவர் ஓக்கே சொல்லிவிட்டால் அந்த கதையை படமாக இயக்குவேன் எனக் கூறியுள்ளார்.

முன்னதாக ஆரம்பம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் சாரை சந்தித்ததாகவும், அப்போது அவர் தன்னுடன் ஜாலியாக பேசியதையும் அட்லீ ஷேர் செய்துள்ளார். விஜய்யின் அன்புத் தம்பியான அட்லீ, அஜித்துக்காக பயங்கரமான கதை எழுதி ரெடி செய்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X