Ajith: "சான்ஸே இல்ல!! பாட்ஷா ரீமேக் பண்ணா அஜித் தான் ஹீரோ..” இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பளீச்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான பாட்ஷா மெகா சூப்பர் ஹிட்டானது.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்தப் படத்தில் ரஜினியின் ஃபேன் பாய் சம்பவத்தை பார்த்து ரசிகர்கள் சிலிர்த்துவிட்டனர்.
அதன்பின்னர் பாட்ஷா செகண்ட் பார்ட் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
ஆனால், பாட்ஷா ரீமேக்கில் அஜித் நடிக்க வேண்டும் என இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூறியது வைரலாகி வருகிறது.

பாட்ஷா ரீமேக்கில் அஜித்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா திரைப்படம், தமிழ் சினிமாவில் பக்கா கமர்ஷியல் மூவி என்பது அனைவரும் அறிந்ததே. பக்கா கேங்ஸ்டர் ஜானரில் மாஸ் ப்ளஸ் ரஜினியின் ஸ்டைலில் தெறிக்கவிட்டது. குறிப்பாக மாணிக் பாட்ஷா கேரக்டரில் ரஜினியின் ப்ளாஷ்பேக் சீன், தீம் மீயூசிக், ரஜினியின் பவர்ஃபுல் ஆக்டிங் எல்லாமே ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் மொமண்ட்.
ரஜினி ரசிகர்களுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் படமான பாட்ஷா, இப்போதும் சீன் பை சீன் வைப் கொடுக்கும். ரஜினி, நக்மா, ரகுவரன், விஜயகுமார், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு தேவா இசையமைத்திருந்தார், சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். 1995ம் ஆண்டு வெளியான பாட்ஷா, இன்றைய 2கே கிட்ஸ்களாலும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகம் வருமா என பலமுறை ரசிகர்கள் கேட்டு வந்தனர். ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினியும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும் அதற்கு வாய்ப்பே இல்லை எனக் கூறிவிட்டனர். அதேநேரம் பாட்ஷா ரீமேக் செய்யப்படுமா எனவும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதுகுறித்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா மனம் திறந்துள்ளார்.
அப்போது ரஜினியை மனதில் வைத்து தான் பாட்ஷா கதை எழுதப்பட்டதாகவும், அதில் அவரை தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், பாட்ஷாவை ரீமேக் செய்தால், அதில் அஜித் சார் மட்டும் தான் பக்காவாக செட்டாகுவார் என இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா மனம் திறந்துள்ளார். அவரது தேர்வும் சரி என்றே ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்திருந்தார். டான் கேரக்டரில் ரஜினியை விடவும் செம்ம ஸ்டைலிஷாக கெத்து காட்டியிருந்தார் அஜித். இந்தப் படத்தில் அஜித்துடன் நயன்தாரா, ரகுமான், பிரபு, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது ரீமேக். விஷ்ணுவர்த்தன் இயக்கிய இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
அதேபோல், பாட்ஷா படத்தின் ரீமேக்கிலும் அஜித் நடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித், அதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா அல்லது ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைவார் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











