குடும்பத்துடன் சென்னை திரும்பிய அஜித்.. ஏர்போர்ட்டில் சுற்றி வளைத்த ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ!
சென்னை விமான நிலையத்தில் நடிகர் அஜித் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.
Recommended Video

சென்னை: கோவாவில் இருந்து சென்னை திரும்பியபோது எடுக்கப்பட்ட அஜித் மற்றும் அவரது குடும்பத்தினரின் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.
பொதுவாகவே திரையுலகைச் சேர்ந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகம். ஆனால் தங்களது புகழ் வெளிச்சம், குடும்பத்தார் மீது குறிப்பாக குழந்தைகள் மீது படர்வதை பல முன்னணி பிரபலங்கள் விரும்புவதில்லை. இதனாலேயே கேமராக் கண்களுக்கு அவர்களை மறைத்தே வளர்க்கின்றனர்.
ஆனால், செல்போன் உதவியால் எப்போதும் கேமராவுடன் அனைவரும் வளைய வரும் இந்நாட்களில் இது சாத்தியப்படுவதில்லை. பொது இடங்களில் இத்தகைய பிரபலங்களைப் பார்க்கும்போது உடனடியாக அவர்களை தங்களது கேமராவிற்குள் பிடித்துவிடவே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல், அவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளவும் விரும்புகின்றனர்.
வைரல் வீடியோ:
அப்படியாக, பொது இடங்களில் அதிக விளம்பரத்தை விரும்பாத நடிகர் அஜித்தின் தனிப்பட்ட மற்றும் குடும்ப புகைப்படங்களை ரசிகர்கள் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அஜித் படத்தைப் போலவே அவரது இத்தகைய புகைப்படங்களும் நீண்ட இடைவெளிக்குப் பிறகே வெளியாவதால், அவற்றை வைரலாக்கி விடுகின்றனர் அவரது ரசிகர்கள்.
கோவா பயணம்:
கடந்த சில தினங்களுக்கு முன் விஸ்வாசம் பட வேலைகள் முடிந்து ஓய்விற்காக தனது குடும்பத்துடன் கோவா சென்றார் அஜித். அப்போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலானது.
சென்னை ரிட்டர்ன்:
இந்நிலையில் தற்போது ஓய்வு முடிந்து அவர் சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் அவரைக் குடும்பத்துடன் கண்ட ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். சிலர் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் மகன்:
போன வீடியோவில் அஜித்தும், அவரது மகளும் தெளிவாக தெரிந்தனர். ஆனால் இந்த வீடியோவில் ஷாலினியும், அவரது மகனும் தெளிவாக தெரிகின்றனர். இதைப் பார்த்து அஜித்தின் குழந்தைகள் மிகவும் பெரியவர்களாக வளர்ந்து விட்டனர் என அவரது ரசிகர்கள் ஆச்சர்யம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











