AR Rahman: அஜித் குடும்பத்துடன் ஏ.ஆர். ரஹ்மான்.. ஆத்விக், அனோஷ்கா எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்க!
சென்னை: நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாமிலியின் ஓவிய கண்காட்சியை காண இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வந்த நிலையில், அவருடன் அஜித் குடும்பமே எடுத்துக் கொண்ட புகைப்படம் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக கலக்கிய ஷாமிலி சினிமாவில் ஹீரோயினாக ஷாலினி போல சாதிக்க முடியவில்லை.
சினிமாவில் சாதிக்க முடியவில்லை என்றால் என்ன? தனக்கு இருக்கும் ஓவியத் திறமை மூலம் கலக்கி வருகிறார் ஷாமிலி.

திருமணம் செய்து கொள்ளாத ஷாமிலி: 35 வயதாகும் ஷாமிலி இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். நடிகை ஷாலினிக்கு 2000ம் ஆண்டே சினிமாவில் டாப் ஹீரோயினாக இருக்கும் போதே நடிகர் அஜித் குமாருடன் காதல் ஏற்பட திருமணம் செய்துக் கொண்டார். அனோஷ்கா, ஆத்விக் என இரு குழந்தைகளும் உள்ளனர்.
ஆனால், ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் சகோதரி ஷாமிலி இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என நினைத்த ஷாமிலிக்கு குழந்தை நட்சத்திரமாக இருந்த போது கிடைத்த சாதனைகள் குமரியான பின்னர் கிடைக்கவில்லை.

ஷாமிலியின் 'ஷீ' ஓவியக் கண்காட்சி: நடனம் மற்றும் ஓவியத் திறமையில் அதிக ஆர்வத்தை செலுத்தி வந்த ஷாமிலி கடந்த சில ஆண்டுகளாகவே பல இடங்களில் தனது ஓவியக் கண்காட்சியை நடத்தி வந்தார்.
இந்நிலையில், சென்னையில் முதன்முறையாக She எனும் ஓவியக் கண்காட்சியை தற்போது நடத்தி வருகிறார். நடிகை ஷாமிலியின் ஓவியக் கண்காட்சியை இயக்குநர் மணிரத்னம், நடிகர் அர்ஜுன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் பார்த்து வருகின்றனர். அதன் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் அவர் ஷேர் செய்து வருகிறார்.

அஜித் குடும்பத்துடன் ஏ.ஆர். ரஹ்மான்: விருது விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் என யார் விழாக்களுக்கு அழைத்தாலும் எவ்வளவு பிசியாக பல படங்களுக்கு இசையமைத்து வந்தாலும் மறுப்பு தெரிவிக்காமல் சமீப காலமாக கலந்து கொண்டு வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான்.
இந்நிலையில், ஷாமிலியின் அழைப்பை ஏற்றி அவரது ஆர்ட் கேலரியை ஏ.ஆர். ரஹ்மான் பார்வையிட்டார். அப்போது நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவரது குழந்தைகளான அனோஷ்கா மற்றும் ஆத்விக் ஏ.ஆர். ரஹ்ம்னான் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அஜித் மட்டும் மிஸ்ஸிங்: வெளிநாடுகளில் பைக் டூர் சென்று வரும் அஜித் தனது மச்சினிச்சியின் இந்த ஓவியக் கண்காட்சிக்கு வருகை தரவில்லை. அஜித் குடும்பமே ஏ.ஆர். ரஹ்மான் உடன் போட்டோ எடுத்த நிலையில், அதில் அஜித் மட்டும் மிஸ் ஆகியிருப்பது ரசிகர்களுக்கு சற்றே வருத்தத்தை கொடுத்துள்ளது.
கூடிய விரைவிலேயே நடிகர் அஜித் சென்னை திரும்பி மே 1ம் தேதி அறிவிக்கப்பட்ட விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











