தியேட்டருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாதீங்க.. விஜய் ரசிகர்களை வம்புக்கிழுத்த விடாமுயற்சி அஜித் ரசிகர்
சென்னை: துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார். படத்தின் ஷூட்டிங் தொடங்கினாலும் ரொம்பவே தாமதமாக நடந்து முடிந்தது. ஒருவழியாக ஷூட்டிங் முடிந்து படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க அஜித் ரசிகர் ஒருவர் விஜய் ரசிகர்களை வம்புக்கிழுக்கும்படி பேசிய வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.
அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் போட்டிக்கு களமிறங்கிய விஜய்யின் வாரிசை வாரி சுருட்டியது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வாரிசு படத்தைவிடவும் ஒருபடி மேலேதான் துணிவு இருந்ததாக பலரும் கூறினார்கள். அந்தப் படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க அஜித் கமிட்டானார். ஆனால் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டதால் மகிழ் திருமேனி லைகா தயாரிப்பில் அஜித்தை வைத்து இயக்குவதற்கு கமிட்டானார்.

விடாமுயற்சி: அதன்படி படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டது. இதில் அஜித்துடன் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் என பலர் கமிட்டானார்கள். முதலில் நீரவ் ஷா சில நாட்கள் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அவருக்கு பதிலாக ஓம் பிரகாஷ் கமிட்டானார். அதுமட்டுமின்றி ஆர்ட் டைரக்டர் மிலனும் உயிரிழந்தார். இப்படி பல காரணங்களால் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ரொம்பவே தள்ளிப்போனது.
வரவேற்பை பெற்ற ட்ரெய்லர்: ஒருவழியாக ஷூட்டிங்கும் முடிந்தது. சூழல் இப்படி இருக்க படத்தின் டீசர் ஏகே ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக திடீரென விடப்பட்டது. அது கலவையான விமர்சனத்தை பெற்றது. அதனைத் தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் ரிலீஸானது. டீசர் போல் இல்லாமல் ட்ரெய்லருக்கு பலமான வரவேற்பு கிடைத்தது. மேலும் படத்திலிருந்து வெளியான இரண்டு சிங்கிள்களுக்கும் ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் ரெஸ்பான்ஸையே கொடுத்திருந்தார்கள்.
இன்று ரிலீஸ்: படமானது ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி ஆறாம் தேதிக்கு தள்ளிப்போனது. அதன்படி விடாமுயற்சி இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல் நாள் முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்படவிருக்கிறது. ஏகேவின் ரசிகர்கள் ஒவ்வொரு தியேட்டரையும் திருவிழா கோலம் பூண வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் அஜித்தின் ரசிகர் ஒருவரின் வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.
என்ன வீடியோ?: அந்த வீடியோவில் அவர், "அஜித்தின் ரசிகர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் மாதிரி தியேட்டருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாதீர்கள். ஏனெனில் நீங்கள் அஜித்தின் ரசிகர்கள் மட்டுமின்றி நல்ல மனிதனுடைய ரசிகர். ஒரு படத்தை ரிலீஸ் செய்யும் தியேட்டருக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்காதீர்கள். சேர்களை போட்டு உடைப்பது, ஸ்க்ரீனருகில் சென்று பட்டாசு வெடிப்பது, கதவுகளை தள்ளுவது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். ஏனெனில் அஜித் நல்ல மனிதன். எனவே மற்ற ரசிகர்கள் மாதிரி இப்படி ஈடுபடாதீர்கள்" என்றார்.
விஜய் ரசிகர்கள்?: இந்த வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட கோபத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். ஏனேனில் கடந்த 2023ஆம் ஆண்டு லியோ படத்தின் ட்ரெய்லர் வந்தபோது சென்னை ரோகிணி தியேட்டரை விஜய்யின் ரசிகர்கள் சேதப்படுத்தினார்கள். இந்த வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள் வேண்டுமென்றே தங்களை அஜித்தின் ரசிகர் வம்புக்கிழுக்கிறார் என்று கோபப்பட்டு கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











