உடல் முழுக்க அஜித் டாட்டூ.. தற்கொலை செய்து கொண்டு தல ரசிகர்.. கலங்கும் ரசிகர்கள் #RIPThalaPRAKASH

சென்னை: நடிகர் அஜித்துக்கு தமிழ்நாட்டில் ஏகப்பட்ட தீவிர ரசிகர்கள் உள்ளனர். அதில் ஒருவரான 'தல பிரகாஷ்' தற்கொலை செய்து கொண்டு இறந்தது அஜித் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

#RIPThalaPRAKASH ஹாஷ்டேக்கில் ஏகப்பட்ட அஜித் ரசிகர்கள் தல பிரகாஷின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதையும் ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

ரசிகர் தற்கொலை

ரசிகர் தற்கொலை

நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான தல பிரகாஷ் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்தது ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #RIPThalaPRAKASH ஹாஷ்டேக்கை உருவாக்கி அஜித் ரசிகர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தல தான் உலகம்

தல தான் உலகம்

தல தான் உலகம் என்று வாழ்ந்து வந்த ஒரு உயிர் இன்று நம்மிடையே இல்லை என தல பிரகாஷின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஏகப்பட்ட அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து தங்களின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

உடல் முழுக்க டாட்டூ

உடல் முழுக்க டாட்டூ

தல பிரகாஷ் சாதாரண அஜித் ரசிகர்கள் அல்ல, தனது உடல் முழுக்க அஜித் பெயரை மட்டுமே பச்சைக் குத்திக் கொண்டு எப்போதுமே தல நினைவுகளுடனே வாழ்ந்து வந்த ஒரு இளைஞர். இவ்வளவு சிறு வயதில் என்ன பிரச்சனை காரணமாக இப்படியொரு முடிவை எடுத்தார் என்றே தெரியாமல் அஜித் ரசிகர்கள் குழம்பித் தவித்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்களும் இரங்கல்

விஜய் ரசிகர்களும் இரங்கல்

சினிமா சம்பந்தமாக தல பெருசா? தளபதி பெருசா என ரசிகர்கள் போட்டிப் போட்டாலும், இது போன்ற நேரங்களில் இருவரும் ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து வருவதை யாரும் மறக்க முடியாது. தல பிரகாஷ் இறந்த செய்தி அறிந்த ஏகப்பட்ட தளபதி ரசிகர்களும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல

தற்கொலை தீர்வல்ல

எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அதனை போராடி சமாளிக்க வேண்டும். நம்மை நம்பி நமது குடும்பம் இருக்கிறது. தற்கொலை எதற்கும் தீர்வாகாது என ஏகப்பட்ட ரசிகர்களும் மற்ற ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லும் நோக்கில் பல பதிவுகளை போட்டு வருகின்றனர். தல பிரகாஷின் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

வைரலாகும் வீடியோ

ஜீ தமிழின் சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஆர்.ஜே. விஜய்யிடம் தனது உடம்பில் உள்ள அத்தனை தல அஜித்தின் டாட்டூக்களையும் காட்டும் வீடியோவையும் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். நடிகர் அஜித்தின் பிறந்தநாள், அவருடைய திறமைகள் என பலவற்றையும் பச்சைக் குத்திக் கொண்ட ஒரு ரசிகர் தற்கொலை செய்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

அஜித் சார்பாக

அஜித் சார்பாக

நடிகர் அஜித் சார்பாக ஏகப்பட்ட ரசிகர்கள் தல அஜித்தின் புகைப்படத்தை பதிவிட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வலிமை படத்தின் அப்டேட் கூட பார்க்காமல் போயிட்டியே டா.. ஏன் டா இப்படி பண்ண என அவருடைய நெருங்கிய நண்பர்கள் தல பிரகாஷின் இந்த முடிவை கண்டித்து திட்டி வரும் ட்வீட்கள் நெஞ்சை கசக்கி பிழிகின்றன. எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால், குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ ஒரு முறை மனம் விட்டு பேசி பாருங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X