உன் ஓட்டு எங்களுக்கு தேவையில்லை.. அஜித் ரசிகரிடம் விஜய் ரசிகர் தகராறு.. எங்க போய் முடியுமோ?
சென்னை: தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு இடையிலான சண்டை என்பது எப்போது நடந்து வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையே நடக்கும் சண்டை குறித்து சொல்லவா வேண்டும். இணையத்தில் நடக்கும் இவர்கள் சண்டை, அவ்வப்போது திரையரங்குகளிலும் நடைபெற்று வருகிறது. அப்படியான சம்பவம்தான் தற்போது நடைபெற்றுள்ளது. இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியல் களத்தில் கால் வைத்துள்ளார். தற்போது அவரது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல், கடந்த ஆண்டே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் கட்சி தொடங்கிய பின்னர் மக்களவை பொதுத் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. ஆனால் அவர் அதில் போட்டியிடவில்லை. மேலும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் தான் இலக்கு என்றும் கூறியிருந்தார். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்னும் சில மாதங்களில் தேர்தல் பணிகளை தொடங்க உள்ளார்.

தற்போது ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் நேற்று அதாவது, ஏப்ரல் 18ஆம் தேதி விஜய் நடிப்பில் உருவாகி ஏற்கனவே வெளியான சச்சின் படம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இதனைப் பார்க்க ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் தியேட்டருக்கு படையெடுத்தார்கள். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது.

விஜய் - அஜித்: கடந்த வாரத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியாகி தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது விஜய்யின் சச்சின் படமும் ரீ ரிலீஸ் ஆகி உள்ளதால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தியேட்டரில் கூடினார்கள். வழக்கமாகவே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் தியேட்டரில் கூடினால், ஏதாவது பஞ்சாயத்து நடப்பது என்பது உறுதி. அப்படியான சம்பவம்தான் நேற்று நடைபெற்றது.
ஓட்டு: அதாவது விஜய் ரசிகை ஒருவருக்கும் அஜித் ரசிகர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அஜித் ரசிகர் பேசும்போது, நான் விஜய்க்கு ஓட்டு போடலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். இப்போது இந்த பொண்ணு பேசுவதைக் கேட்டால், விஜய்க்கு ஓட்டு போடனுமா என யோசிக்கிறேன். இந்த ஒருவரே இப்படி பேசுகிறார் என்றால் மற்றவர்கள் எப்படி எல்லாம் பேசுவார்கள் என கேட்டார்.

தேவையில்லை: அஜித் ரசிகர் இவ்வாறு கூறியதும், உன்னுடைய ஓட்டு எங்களுக்கு தேவையில்லை என விஜய் ரசிகர் கூறுகிறார். உடனே, விஜய் சர்கார் எனும் படத்தில் ஒரு ஓட்டுக்காக தான் போராடுவார். அது கூட தெரியாமல் இருக்குறீர்கள்" என அஜித் ரசிகர் பதில் அளிக்கிறார். விஜய் கட்சி தொடங்கிய பின்னர் விஜய் ரசிகர்கள் அஜித் மற்றும் அஜித் ரசிகர்களை கலாய்ப்பது ட்ரோல் செய்வதோ முன்பை காட்டிலும் குறைவாக இருந்தாலும், அவை முற்றிலும் குறையவில்லை. ரசிகர்களுக்கு இடையிலான மோதல் குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











