twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தல படத்துக்கு டிக்கெட் கிடைக்கல.. தீக்குளிக்க முயற்சித்த ரசிகர்.. சென்னை தியேட்டர் வாசலில் பரபரப்பு!

    நேர்கொண்ட பார்வை படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் விரக்கியடைந்த அஜித் ரசிகர் ஒருவர் தியேட்டர் வாசலில் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    |

    சென்னை: நேர்கொண்ட பார்வை படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் விரக்கியடைந்த அஜித் ரசிகர் ஒருவர் தியேட்டர் வாசலில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 600க்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

    Ajith fan tries to burn himself in front of Chennai Sathyam theater

    சென்னையை பொறுத்த வரை பெரிய தியேட்டர்கள் அனைத்திலும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகியுள்ளது. சத்யம், காசி, ரோகினி உள்ளிட்ட தியேட்டர்களில் அஜித் ரசிகர்களுக்காக அதிகாரை காட்சி திரையிடப்பட்டது.

    "என்கேபி படம் ஓடக்கூடாதுனு சதி பண்றீங்களா?".. பிரபல நடிகரை டிவிட்டரில் வறுத்தெடுத்த தல ரசிகர்கள்!

    படம் பார்க்க ஏராளமான அஜித் ரசிகர்கள் இரவு முதலே தியேட்டர் வாசலில் காத்திருக்க தொடங்கினர். பெரும்பாலான தியேட்டர்களில் அதிகாலை காட்சிக்கு நேற்று இரவு தான் முன்பதிவு தொடங்கியது. இதனால் ரசிகர்கள் டிக்கெட் வாங்க ரசிகர்கள் முட்டிமோதினர்.

    இந்நிலையில் சென்னை சத்யம் தியேட்டரின் முன் ரசிகர் ஒரு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். டிக்கெட் கிடைக்காத விரக்தியில் அவர் இவ்வாறு செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் தியேட்டர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் குறித்து நடிகர் சாந்தனு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    English summary
    In Chennai Sathyam theater a Ajith fans tried to burn himself as he was frustrated for not getting ticket for Nerkonda Parvai movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X