Don't Miss!
- News
இருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. 12 மணி நேரம் ஆகுமாம்.. என்னாச்சு?
- Technology
விபூதி அடிக்கும் BharOS என்கிற "பாரத்" ஓஎஸ்? இந்த உண்மை தெரிஞ்சா.. கழுவி கழுவி ஊத்துவீங்க!
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Finance
மீண்டும் இந்தியா.. டெஸ்லா-வுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் 3 மாநிலங்கள்..!
- Lifestyle
கும்பத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் பிப்ரவரியில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகுது...
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
துணிவு படத்தின் இடைவேளையில் வாரிசு பாடல்... அஜித் ரசிகர்கள் என்ன பண்ணாங்கன்னு தெரியுமா?
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு படங்களும் 11ம் தேதி ரிலீஸானதால் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் கட்டுங்கடாமல் இருக்கின்றது.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வாரிசு, துணிவு என இரண்டு படங்களுக்கும் சமமான ஸ்க்ரீன்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், துணிவு படம் ஓடிக்கொண்டிருந்த ஒரு மல்டி பிளக்ஸில், வாரிசு பாடல் ஒலித்ததால் அஜித் ரசிகர்கள் சம்பவம் செய்துள்ளனர்.
ரசிகர்களின் கொண்டாட்டத்தில் வாரிசு, துணிவு... விஜய்யும் அஜித்தும் சேர்ந்து கொடுத்த சர்ப்ரைஸ்...

துணிவு - வாரிசு மோதல்
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான விஜய்யும் அஜித்தும் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பொங்கல் ரேஸில் களமிறங்கியுள்ளனர். அஜித் நடிப்பில் துணிவும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் நேற்று முன்தினம் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. துணிவு பேன் பாய் சம்பவமாகவும், விஜய்யின் வாரிசு ஃபேமிலி சென்டிமெண்டலான படம் எனவும் ரசிகர்கள் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர். இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாவது உறுதியானதில் இருந்தே இருதரப்பு ரசிகர்களும் அட்ராசிட்டி செய்து வருகின்றனர்.

துணிவு பிரேக்கில் வாரிசு பாடல்
விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு என இரண்டுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளதால், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனிடையே இரண்டு படங்களுக்குமே தமிழ்நாட்டில் சமமான திரையரங்குகள் தான் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஏற்கனவே பல சர்ச்சைகளும் வதந்திகளும் செய்திகளில் வந்ததை பார்க்க முடிந்தது. இதுவே மிகப் பெரிய விவாதமாக சென்ற நிலையில், துணிவு படத்தின் பிரேக்கில் வாரிசு பாடல் ஒலிப்பரப்பானது அஜித் ரசிகர்களை செம்ம கடுப்பாக்கியுள்ளது.

செருப்பால் அடித்த ரசிகர்கள்
தமிழ்நாட்டில் உள்ள மல்டி பிளக்ஸ் திரையரங்கு ஒன்றில் அஜித்தின் துணிவு திரையிடப்பட்டுள்ளது. தியேட்டர் முழுக்க அஜித் ரசிகர்கள் நிரம்பியிருந்துள்ளனர். படத்தின் முதல் பாதி முடிந்து இடைவேளை பிரேக் விடப்பட்ட போது, விஜய்யின் வாரிசு பட பாடலை தியேட்டர் நிர்வாகம் ஒலிபரப்பியுள்ளது. அதுவும் குறிப்பாக வாரிசு படத்தில் இடம்பெற்ற தீ தளபதி என்ற பாடல் ஒலித்துள்ளது. இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள், ஸ்க்ரீன் மீது செருப்பை வீச ரகளையில் ஈடுபட்டன. இதனையடுத்து உடனடியாக அந்தப் பாடல் நிறுத்தப்பட்டது.

எங்க ஏரியா உள்ள வராத
விஜய் பாடலை கேட்டு அஜித் ரசிகர்கள் உக்கிரமானது, தியேட்டரில் இருந்த பொதுவான ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் இந்த தியேட்டர் காரைக்குடியில் உள்ளது என்வும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து இந்த வீடியோவை நெட்டிசன்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அஜித்தின் பட இடைவேளையின் நடுவே விஜய்யின் வாரிசு பாடல் ஒலித்தது அவ்வளவு பெரிய பிரச்சினையா எனவும் சினிமா ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.