Ajith: விடாமுயற்சி அப்டேட் கூட வரல.. இதேதான் அந்த டெய்லரும் சொன்னார்.. சோகத்தில் அஜித் ரசிகர்கள்
சென்னை: அஜித்தின் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.
லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் டீசர் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விடாமுயற்சி ஷூட்டிங் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது.
ஆனால், இன்னும் படப்பிடிப்பு தொடங்காததால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
விடாமுயற்சி ஷூட்டிங் அப்டேட்
துணிவு படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனத்துடன் இணைந்தார் அஜித். அதன்படி அவரது 62வது படத்தை லைகா தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால், திடீரென விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி கமிட்டானார். இதனால், மார்ச் மாதம் தொடங்கவிருந்த ஏகே 62 ஷூட்டிங் தள்ளிப்போனது.
இறுதியாக அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி ஏகே 62 டைட்டிலை படக்குழு அறிவித்தது. அதன்படி, விடாமுயற்சி என்ற டைட்டில் இந்தப் படம் உருவாகவுள்ளது. அஜித், மகிழ் திருமேனி, அனிருத், லைகா என அசத்தல் காம்போவில் உருவாகும் விடாமுயற்சி, ரசிகர்களுக்கு ஆக்ஷன் ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அஜித்தின் துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானதால், விடாமுயற்சி மீதான எதிர்பார்ப்பும் அதிகமானது.
இந்நிலையில், பைக் டூர் சென்றிருந்த அஜித் சென்னை திரும்பியதும் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால், அவர் சென்னை வந்துவிட்டு அதே வேகத்தில் துபாய் சென்றுவிட்டார். அங்கு அவரும் மகிழ் திருமேனியும் விடாமுயற்சி ப்ரீ புரோடக்ஷன் குறித்து டிஸ்கஷனில் இருக்கிறார்களாம். முன்னதாக இருவரும் லண்டன் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் விடாமுயற்சி படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் தொடங்கும் என சொல்லப்பட்டது. இதற்காக புனேவில் பிரம்மாண்டமாக செட் போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனாலும், விடாமுயற்சி படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் தாமதமாகிக் கொண்டே போகிறது. அதேபோல், விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை கூட படக்குழு இன்னும் வெளியிடவில்லை. இதுவும் அஜித் ரசிகர்களுக்கு தாங்கமுடியாத வேதனையாக இருக்கிறதாம்.
இந்தப் படம் தொடங்கப்பட்டதில் இருந்தே விக்னேஷ் சிவனால் முதல் பஞ்சாயத்து வந்தது. இப்போது டைட்டில் உறுதியான பின்னரும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் விடாமுயற்சி படத்தில் எந்த பிரச்சினையும் இல்லையென்றும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கிவிடும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











