Ajith: லியோ வைப் நடுவில் சைலண்டாக வெளியான அஜித் போஸ்டர்... இது AK சினிமாட்டிக் யூனிவர்ஸ்!

சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய்யின் லியோ திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனால் கோலிவுட்டே லியோ வைப்பில் இருக்கும் நேரம் பார்த்து அஜித்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

 Ajith: Fans are trending Ajiths Salt and Pepper fanmade poster

ட்ரெண்டாகும் அஜித்தின் நியூ போஸ்டர்: துணிவு படத்தின் ஷூட்டிங்கின் போதே லைகா நிறுவனத்துடன் கூட்டணி வைத்தார் அஜித். அதன்படி அஜித்தின் 62வது படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பதாகவும், விக்னேஷ் சிவன் அதன் இயக்குநராகவும் கமிட்டானார். இதனால் துணிவு வெளியானதுமே ஏகே 62 படப்பிடிப்பு தொடங்கப்படும் என சொல்லப்பட்டது.

ஆனால், விக்னேஷ் சிவன் செய்த சொதப்பலால், கடைசி நேரத்தில் அவர் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி இயக்குநராக கமிட்டானார். இதனையடுத்து ஏகே 62 டைட்டில் விடாமுயற்சி என கன்ஃபார்ம் ஆனது. மேலும், ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் முடிய தாமதமானதால் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்காமல் இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தான் அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி ஷூட்டிங்கை படக்குழு தொடங்கியது.

படப்பிடிப்பு தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே விடாமுயற்சி ஆர்ட் டைரக்டர் மிலன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால் விடாமுயற்சி ஷூட்டிங் என்ன ஆனது என்பதே இதுவரை தெரியவில்லை. ஆயுத பூஜை ஸ்பெஷலாக விடாமுயற்சி படத்தில் இருந்து ஏதேனும் அப்டேட் வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். தற்போது அதுவும் சந்தேகம் தான் என சொல்லப்படுகிறது.

 Ajith: Fans are trending Ajiths Salt and Pepper fanmade poster

இந்நிலையில் அஜித்தின் போஸ்டர் ஒன்று டிவிட்டரில் வைரலாகி வருகிறது. விஜய்யின் லியோ திரைப்படம் நேற்று வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் விஜய்யின் லியோ படத்தை ரசிகர்கள் வைப் செய்து வருகின்றனர். இதனிடையே அஜித்தின் தெறிமாஸ் போஸ்டர் ட்ரெண்டாகி வருகிறது. சால்ட் & பெப்பர் லுக்கில் கார்கோ பேண்ட், ஒயிட் ஷார்ட் அணிந்துள்ள அஜித்தின் கையில் ஆங்கில புத்தகம் உள்ளது.

செம்ம ராயல் லுக்கில் அஜித்தின் இந்த போஸ்டர், லியோ தாஸ்க்கு டஃப் கொடுத்து வருகிறது. அதேநேரம் இது விடாமுயற்சி போஸ்டர் இல்லையென்றும், ரசிகர்களின் ஃபேன்மேட் போஸ்டர் என்பதும் தெரியவந்துள்ளது. விடாமுயற்சி அப்டேட் வராத விரக்தியில் இருக்கும் அஜித் ரசிகர்கள், இந்த போஸ்டரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X