சன் டிவியில் அஜித்தின் வீரம்.. தாறுமாறாக டிரெண்டாக்கும் தல ரசிகர்கள்.. டிஆர்பியில் சாதனை படைக்குமா?

By

சென்னை: அஜித்தின் வீரம் படம் சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதை அடுத்து ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

Recommended Video

Shocking! Why Ajith avoids crowd | Alisha Abdullah

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த படம் வீரம். விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்திருந்தார்.

விதார்த், பாலா, சந்தானம், அபிநயா, நாசர், அப்புக்குட்டி, தம்பி ராமையா உட்பட பலர் நடித்திருந்தனர்.

சன் டிவியில்

சன் டிவியில்

வெற்றி ஒளிப்பதிவு செய்திருந்தார். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி ஹிட்டானது. சிறுத்தை சிவா, அஜித்துடன் இணைந்த முதல் படம் இது. இந்தப் படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தியிலும் ரீமேக் ஆகிறது. இந்நிலையில் இந்தப் படம் சன் டிவியில் இன்று மாலை 6.30 மணிக்கு ஒளிப்பரப்பாக இருக்கிறது.

ஹேஷ்டேக்

சமீபகாலமாக அஜித், விஜய் படங்கள் சேனல்களில் ஒளிப்பரப்பானால், ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டாக்குவதை, அவரது ரசிகர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி இப்போது #VeeramOnSunTV என்று ஹேஷ்டேக்கை உருவாக்கி, ட்விட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். சில ரசிகர்கள், அந்தப் படத்தின் வெளிவராத ஷூட்டிங் ஸ்டில்களை பதிவு செய்துள்ளனர்.

பொங்கல் வின்னர்

சிலர், இந்தப் படம் அஜித் ரசிகர்களையும் மக்களையும் முழுமையாக திருப்தி செய்த படம். 2014 ஆம் வருடத்தின் பொங்கல் வின்னர் இந்தப் படம்தான் என்று தெரிவித்துள்ளனர். இன்னொரு ரசிகர், ட்விட்டரில் 'வீரம்' இப்போது டிரெண்டாகி வருகிறது. அதனால்தான், தல அஜித்தை டிஆர்பி கிங் என்று சொல்கிறோம் என்று பெருமையாகக் கூறியுள்ளார்.

சண்டைக் காட்சி

ஒரு ரசிகர் இந்தப் படத்தின் ரிஸ்கான ரயில் சண்டைக் காட்சி பற்றி ஒளிப்பதிவாளர் வெற்றி பேசிய வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்தப் படம் சிறந்த ஃபேமிலி என்டர்டெயினர். குடும்பத்துடன் பார்ப்பதற்கு சரியான படம். டிஆர்பியில் இன்று இந்த படம் சாதனை படைக்கும் என்று அஜித் ரசிகர்கள் சிலர் தெரிவித்துள்ளார்.

விஸ்வாசம்

விஸ்வாசம்

கடந்த ஜனவரி மாதம் அஜித்தின் விஸ்வாசம் படம் சன் டிவியில் ஒளிபரப்பானது. நயன்தாரா, ஜெகபதிபாபு, விவேக், யோகிபாபு, தம்பி ராமையா உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தையும் சிவா இயக்கி இருந்தார். அப்போது #TRPHunterVISWASAMOnSunTv என்ற ஹாஷ்டேக்கையும் #விஸ்வாசம் என்ற ஹாஷ்டேக்கையும் உருவாக்கி ரசிகர்கள் டிரெண்டாக்கி இருந்தனர்.

பிச்சைக்காரன்

பிச்சைக்காரன்

இந்தப் படம் டிஆர்பி ரேட்டிங்கில் சாதனை படைத்தது. டிவியில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட தென்னிந்திய படமாக, விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் இருந்தது. இந்தச் சாதனையை, அஜித்தின் விஸ்வாசம் படம் முறியடித்தது. அதைப் போல வீரம் படமும் டிஆர்பியில் சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சாதனை படைக்கும்

சாதனை படைக்கும்

கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களுடைய ஒரே பொழுதுபோக்கு ஆன்லைனில் படங்கள் பார்ப்பது மற்றும் டிவி பார்ப்பதாக இருக்கிறது. இந்நிலையில் இப்போது இந்த படம் டிவியில் வெளியாவதால், கண்டிப்பாக டிஆர்பி ரேட்டிங்கில் சாதனை படைக்கும் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X