ச்சி.. ச்சி.. ச்சி.. விடாமுயற்சி.. படத்துல மொத்தம் 3 மெண்டல்.. அஜித் ரசிகர்களே இப்படி கதறுனா எப்படி?
சென்னை: மகிழ் திருமேனி உஷாரா தனது பேட்டிகளில் இந்த படத்துல எந்தவொரு மாஸ் சீனும் இருக்காது என்றும் படம் கதையை நோக்கி மட்டுமே பயணிக்கும். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் அஜித் குமார் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு இந்த படத்தை உருவாக்க சொன்னார் என பேட்டியளித்த நிலையில், ரசிகர்கள் யாரும் மகிழ் திருமேனியை திட்டவே இல்லை.
அதற்கு மாறாக அஜித் குமார் ஏன் இப்படியொரு ஸ்க்ரிப்ட்டை தேர்வு செய்தார் என்றும் 1997ம் ஆண்டு வெளியான பிரேக்டவுன் படத்தை ரீமேக் செய்ய விரும்பினாலும் ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் படத்தில் சில காட்சிகளை வைத்திருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

படம் ஆரம்பித்ததில் இருந்து சவதீகா பாடல் வரை ஆட்டம் போட்ட ரசிகர்கள் அதன் பின்னர் அப்படியே அமைதியாக அனிருத் மட்டுமே அடிக்கடி தட்டி எழுப்புகிறார் என்கின்றனர். இந்நிலையில், டிரெண்டாகி வரும் "ச்சி.. ச்சி.. ச்சி" பாடலை வைத்து ரசிகர் ஒருவர் கொடுத்த பப்ளிக் விமர்சனம் ஒன்றும் தீயாக பரவி வருகிறது.
விடாமுயற்சி வசூல் குறைவு: முதல் நாளிலேயே விடாமுயற்சி திரைப்படம் 23 கோடி ரூபாய் வசூலை தான் தமிழ்நாட்டில் எடுத்துள்ளது என்றும் 2வது நாளில் வெறும் 6.5 கோடி ரூபாய் தான் என்றும் ஒட்டுமொத்தமாக இதுவரை 30 கோடி ரூபாய் வரை தான் வசூல் வந்துள்ளதாகவும் பத்திரிகையாளர் பிஸ்மி யூடியூபில் பேசியது ரசிகர்களை மேலும், அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது. அஜித் ரசிகர்கள் மட்டும் படத்தின் முதல் நாள் வசூல் 60 கோடி என போஸ்டர் அடித்து ஷேர் செய்து வருகின்றனர். ஓவர்சீஸிலும் இந்த படம் பயங்கர அடிவாங்கி விட்டதாக கூறுகின்றனர். லைகா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்காததும் அஜித் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த 3வது மெண்டல்: விடாமுயற்சி படத்தில் மொத்தம் 3 மெண்டல் சார். ஒரு மெண்டல் அர்ஜுன், இன்னொரு மெண்டல் ரெஜினா கசாண்ட்ரா இவங்க ரெண்டு பேரும் பக்காவா பிளான் பண்ணி த்ரிஷாவை கடத்திடுறாங்க. அஜித் கடைசி வரை தனது பொண்டாட்டியை தேடுறாரு, தேடுறாரு தேடிக்கொண்டே இருக்காரு. அந்த 3வது மெண்டல் வேற யாரும் இல்லை, ரசிகனான நான் தான் எனக்கூறிவிட்டு "பணத்துக்காக என் மனசை மறந்து அவன் கூட போனியே.. அஜித் சார் பாட, த்ரிஷா மேம் ஓட ஒரே கூத்தா இருக்கும்" என ரசிகர் ஒருவர் கொடுத்த விமர்சனம் சோஷியல் மீடியாவில் தீயாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
விஜய் பெட்டர்: சூப்பரான படம் கொடுக்கவில்லை என்றாலும் தனது ரசிகர்களை மனதில் வைத்துக் கொண்டு அவர்கள் கொண்டாடும் படத்தையாவது தளபதி விஜய் கொடுத்து வருகிறார் என்றும் கோலிவுட்டை விட்டு அவர் செல்வது நிச்சயம் சினிமாவுக்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய இழப்பாக அமையும் என்றும் அஜித் ரசிகர்கள் விஜய்யே பெட்டர் என விடாமுயற்சி படம் வெளியானதில் இருந்து பதிவுகளை போட ஆரம்பித்துவிட்டனர். அந்தளவுக்கு இந்த படத்தினால் அவர்கள் ரொம்பவே அப்செட் ஆகியுள்ளனர். ஆனால், கண்டிப்பாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் படமாக குட் பேட் அக்லி படம் அமையும் என்றும் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











