twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நியூசிலாந்து கிரிக்கெட் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்...வைரலாகும் ஃபோட்டோ

    |

    சென்னை : டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அஜித் நடித்து வரும் படம் வலிமை. இது வரை இந்த படத்தின் ஃபஸ்ட்லுக், போஸ்டர் என எதுவும் வெளியிடப்படவில்லை.

    இதனால் பொறுமை இழந்த அஜித் ரசிகர்கள் பிரதமர், முதல்வர், விஐபி.,க்கள் என பலரிடமும் வலிமை அப்டேட் கேட்க துவங்கி விட்டனர். இதனைடுத்து இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அஜித் அறிக்கை மூலம் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார்.

    ஒற்றைக் காலில் நின்றும்.. கைகளை மட்டும் ஊன்றியும்.. நடிகர் சூரியின் அசத்தல் யோகா! ஒற்றைக் காலில் நின்றும்.. கைகளை மட்டும் ஊன்றியும்.. நடிகர் சூரியின் அசத்தல் யோகா!

    இருந்தும் வலிமை அப்டேட் கேட்பதை அஜித் ரசிகர்கள் நிறுத்துவதாக தெரியவில்லை. தமிழக சட்டசபை தேர்தலின் போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடமும் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டார். அதற்கு வானதி சீனிவாசனோ, நான் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சொல்கிறேன் என்றார்.

    கொரோனாவால் தள்ளிபோன ஃபஸ்ட்லுக்

    கொரோனாவால் தள்ளிபோன ஃபஸ்ட்லுக்

    ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு வருவதால் அஜித்தின் பிறந்தநாளான மே 1 அன்று படத்தின் ஃபஸ்ட்லுக்கையும், அதைத் தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் படத்தின் டீசர், டிரைலர் ஆகியவற்றையும் வெளியிட வேண்டும் என அஜித், படக்குழுவிடம் கேட்டுக் கொண்டார். இதனால் மே 1 அன்று ஃபஸ்ட்லுக் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் போனி கபூரும் அறிவித்தார். ஆனால் அதற்குள் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததால் ஃபஸ்ட்லுக் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டது.

    இங்கிலாந்திலும் வலிமை அப்டேட்

    இங்கிலாந்திலும் வலிமை அப்டேட்

    நம்மூரில் மட்டுமல்ல இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற்ற மைதானத்திலும் அஜித் ரசிகர்கள் சிலர் வலிமை அப்டேட் என்ற பதாகைகளை கையில் ஏந்தி இருந்தனர். அந்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வினிடமும் அப்டேட் கேட்டனர். இது பற்றி யூட்யூப் பேட்டியில் அவர் காமெடியாக கூறி இருந்தார்.

    நியூசிலாந்திலும் விடாத அஜித் ரசிகர்கள்

    நியூசிலாந்திலும் விடாத அஜித் ரசிகர்கள்

    பிறகு சவுதாம்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து மோதிய ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வலிமை அப்டேட் கேட்டுள்ளனர். இந்த ஃபோட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலர், இங்கேயுமாடா என கமெண்ட் செய்துள்ளனர்.

    வலிமை தள்ளி போக காரணம்

    வலிமை தள்ளி போக காரணம்

    வலிமை படத்தின் வேலைகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டன. வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய க்ளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் மீதம் உள்ளது. இதனால் வெளிநாடு செல்ல அரசின் அனுமதிக்காக படக்குழு காத்திருக்கிறது. அத்துடன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விடும் என்கிறார்கள். இதற்கிடையில் கொரோனா காரணமாக 60 வயதிற்கு மேற்பட்ட நடிகர், நடிகைகள் படத்தில் இருந்து விலகியதால் அவர்கள் நடித்த காட்சிகள் வேறு ஒருவரை வைத்து மீண்டும் எடுக்கப்பட்டு வருவதாலேயே படம் தாமதமாவதாக டைரக்டர் வினோத் கூறி இருந்தார்.

    English summary
    Thala fans in Southampton, holding a placard during the ICC World Test Championship final between India and New Zealand that read, "Valimai update".
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X