வலிமை அப்டேட்.. பிரதமர் மோடியையும் விட்டு வைக்காத தல ரசிகர்கள்.. என்ன செஞ்சாங்கன்னு பாருங்க!

சென்னை: பிரதமர் மோடியின் சென்னை வருகையின் போது வலிமை அப்டேட் கேட்டு தல அஜித் ரசிகர்கள் கத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Valimai Update வந்தாச்சு February இறுதியில்! | Thala Ajith, H.Vinoth

தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் வலிமை.

படத்தின் ஷூட்டிங்கே முடியவுள்ள நிலையில், இன்னமும் ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கூட படக்குழு வெளியிடவில்லை.

இரண்டாவது படம்

இரண்டாவது படம்

சதுரங்க வேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்த இயக்குநர் வினோத், நடிகர் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தையும் அட்டகாசமாக இயக்கி இருந்தார். 2019ம் ஆண்டு போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித்தை வைத்து பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தை நேர்கொண்ட பார்வை என ரீமேக் செய்த வினோத், தற்போது வலிமை படத்தை அவரது ஸ்டைலில் இயக்கி வருகிறார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

படத்தின் டைட்டில் வலிமை என்பதை தவிர அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குநர் எச். வினோத் இதுவரை வெளியிடவில்லை. யுவன் சங்கர் ராஜா இசையில் விக்னேஷ் வரிகளில் அட்டகாசமான இன்ட்ரோ பாடல் உருவாகி உள்ளது தொடர்பான அப்டேட்டை சமீபத்தில் வெளியிட்டார்.

அப்டேட் அலப்பறை

அப்டேட் அலப்பறை

தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வந்து, படமும் வெளியானது. அடுத்ததாக தளபதி 65 அப்டேட்டும் வெளியாகி உள்ளதால், தல ரசிகர்கள் ரொம்பவே கடுப்பாகி விட்டனர். அப்டேட் கேட்டு தயாரிப்பாளர் போனி கபூரை தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்த அவர்கள், தற்போது எல்லோரிடமும் அப்டேட் கேட்டு அலப்பறை செய்து வருகின்றனர்.

கடவுள் முருகன்

பில்லா படத்தில் முருக கடவுளை வேண்டி ஆடி பாடி அசத்தியிருப்பார் தல அஜித். முருகக் கடவுளின் பேனரில் வலிமை பட அப்டேட் கேட்டு சமீபத்தில் தல அஜித் ரசிகர்கள் பண்ணதெல்லாம் வேற லெவல் அக்கப்போர் என்றே சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து முருகன் அருளால் சில பிரத்யேக போட்டோக்களும், அப்டேட்களும் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

முதல்வரிடம்

முருகக் கடவுளை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் வலிமை பட அப்டேட்டை கேட்டு கோரிக்கை வைத்தனர். இப்படி அடுத்த லெவல் அட்டகாசங்களில் தல ரசிகர்கள் இறங்கினாலும், வலிமை படக்குழு கொஞ்சம் கூட ரசிகர்களின் கோரிக்கைகளை செவி சாய்க்காமல் ஒரு ஃபர்ஸ்ட் லுக்கை கூட விடாமல் கல் நெஞ்சை காட்டி வருகிறது.

மொயின் அலியிடம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 13ம் தேதி நடைபெற்றது. அப்போது பெவிலியன் அருகே ஃபீல்டிங்கில் இருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியிடமும் அதன் பின்னர் பந்துவீச்சாளர் அஸ்வினிடமும் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ வைரலானது.

பிரதமரையும் விடல

இந்நிலையில், நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்திற்கு வந்த பிரதமர் மோடி வரும் வழியில் அதிமுக பேனருக்கு பின்னால் வலிமை அப்டேட் கேட்டு எழுதி வைத்துக் கொண்டு காத்திருந்த அஜித் ரசிகர்கள், மோடியின் கார் கடந்து செல்லும் போது, ஐயா வலிமை அப்டேட் வாங்கித் தாங்கய்யா என கத்தும் வீடியோ இணையத்தில் தற்போது தீயாக பரவி வருகிறது.

வீம்பு ஏன்

வீம்பு ஏன்

தல ரசிகர்களின் உணர்வுகளை கொஞ்சமாவது புரிந்து கொண்டு ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டை வலிமை படக்குழு கொடுத்தால் தான் என்ன? பாவம் அவங்களும் எத்தனை நாளைக்குத் தான் இப்படி அப்டேட் கேட்டு அலைவார்கள். ஒரு அப்டேட் கொடுத்தால், ஓயாமல் அடுத்தடுத்து கேட்டு தொல்லை செய்வார்கள் என்பதாலே படக்குழு கொடுக்க மறுக்கிறதா? என்றும் தெரியவில்லை. தல அஜித் ஏதாவது பார்த்து செய்தால் தான் உண்டு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X