உங்களை ஜெயிக்க வச்சுட்டோம்.. வலிமை அப்டேட் கொடுங்க.. வானதியிடம் அடம்பிடிக்கும் அஜித் ரசிகர்கள்!

சென்னை: கோவை தெற்கு தொகுயில் வெற்றி பெற்ற வானதியிடம் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வருகின்றனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார் வானதி சீனிவாசன்.

இதன் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.

வானதி வெற்றி

வானதி வெற்றி

இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசனுடன் கடைசி வரை போராடி 1400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் வானதி சீனிவாசன். தனது வெற்றியை தொடர்ந்து வாக்காளர்களுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி கூறியிருந்தார் வானதி சீனிவாசன்.

அப்டேட் கொடுங்கள்

அப்டேட் கொடுங்கள்

அதனை பார்த்த அஜித் ரசிகர்கள் நீங்கள் கேட்டது போல் உங்களுக்கு வாக்களித்து விட்டோம். நீங்கள் சொன்னது போல் எங்களுக்கு அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட் வாங்கி கொடுங்கள் என கேட்டு வருகின்றனர்.

ஹேஷ்டேக் ட்ரென்ட்

ஹேஷ்டேக் ட்ரென்ட்

கடந்த மாதம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து வந்தனர். மேலும் அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரிடமும் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர்.

வானதி வாக்குறுதி

வானதி வாக்குறுதி

இதனை பார்த்த வானதி சீனிவாசன், நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி என்று அஜித் ரசிகர்களிடம் வாக்குறுதி அளித்திருந்தார். மேலும் #Valimai, #Valimaiupdate என்ற ஹேஷ்டேக்குகளையும் குறிப்பிட்டிருந்தார்.

நம்பிக்கையில் உள்ளோம்

நம்பிக்கையில் உள்ளோம்

தற்போது வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டு அடம் பிடிக்க தொடங்கிவிட்டனர் அஜித் ரசிகர்கள். வானதிக்கு டிவிட்டியுள்ள இந்த ரசிகர், வாழ்த்துக்கள் அக்கா உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி அப்புறம் ஒரு சிறிய வேண்டுகோள் நீங்கள் வெற்றி பெற்றால் வலிமை அப்டேட் வாங்கி தருவதாக சொல்லி இருக்கிர்கள் அதை நிறைவேற்றுவிர்கள் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என கூறியுள்ளார்.

அப்டேட் கொடுத்தீங்கன்னா..

அப்டேட் கொடுத்தீங்கன்னா..

வானதி சீனிவாசனின் நன்றி செய்தியை பார்த்த இந்த நெட்டிசன், அப்படியே சொன்னபடி அந்த வலிமை அப்டேட் வாங்கி கொடுத்தீங்கன்னா என்று பதிவிட்டு அப்டேட் கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X