இனிமேல் பல இடங்களில் விஜய் ரசிகர்கள் அடிவாங்குவார்களாம்.. ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட வீடியோ!
சென்னை: அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் உலக அளவில் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 10ம் தேதி வெளியான இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக மிகப்பெரிய அளவில் வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகவே அஜித் மற்றும் விஜய் படங்கள் தியேட்டர்களில் வெளியானால் ரசிகர்கள் சண்டை நடைபெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது.
போஸ்டர்களையும் பேனர்களையும் கிழிப்பது, அதிக உயரத்தில் கட் அவுட் வைப்பது என சண்டை செய்வார்கள். இந்நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் ஓடிய ஒரு தியேட்டரில் விஜய்யின் தவெக கட்சிக்காக கத்திய விஜய் ரசிகர்கள் சிலரை அஜித் ரசிகர்கள் பலர் ரவுண்டு கட்டி அடித்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவை ஷேர் செய்த ப்ளூ சட்டை மாறன் இனிமேல், பல இடங்களில் விஜய் ரசிகர்கள் இப்படித்தான் அடிவாங்குவார்கள் என்றும் அவர் ட்வீட் போட்டு மேலும், ரசிகர்கள் சண்டையை அதிகரித்துள்ளார்.
அஜித் ரசிகர்களுக்கான படம்: ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாரின் ஃபேன் பாய் என்பதால் முழுக்க முழுக்க அஜித்தை தலையில் வைத்து பில்டப் மசாலாக்களை தூவி கொண்டாடும் அளவுக்கு ஒரு படமாக குட் பேட் அக்லி படத்தைக் கொடுத்துள்ளார். பொதுமக்களுக்கு பெரிதாக படம் பிடிக்கவில்லை என்கிற ரிப்போர்ட்டுகளும் குவிந்து வருகின்றன. எந்தவொரு நல்ல கதையும் இல்லாமல் ஒளிப்பதிவாளர், மேக்கப் மேன் மற்றும் நடிகர்களை ஆதிக் ரவிச்சந்திரன் வீணடித்துவிட்டார் என்றும் ஆதிக் தான் ரசிகர்களின் பல்ஸ் அறிந்து அஜித்துக்கு அட்டகாசமாக ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார். இன்னும் 3 படம் கூட ஆதிக் அஜித்தை வைத்து பண்ணலாம் என்றும் இரு தரப்பட்ட கருத்துக்கள் குவிந்து வருகின்றன.
உலகளவில் வசூலை அறிவிக்கவில்லை: மைத்ரி மூவி மேக்கர்ஸ் புஷ்பா 2 படத்துக்கு உலகளவிலான வசூலை அறிவித்து பில்டப் ஏத்திய நிலையில், குட் பேட் அக்லி படத்துக்கு தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 30.9 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவித்தது. ஆனால், உலகளவில் குட் பேட் அக்லி திரைப்படம் எந்தளவுக்கு வசூல் செய்தது என்பதை அறிவிக்கவில்லை. தமிழ்நாட்டை தாண்டி ஓவர்சீஸிலும் முதல் நாள் வசூல் நன்றாகவே இருந்தது என்றும் அதிகபட்சமாக 50 முதல் 60 கோடி ரூபாயை குட் பேட் அக்லி முதல் நாளில் அள்ளியிருக்கும் என்றும் பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தவெக கோஷம்: விஜய்யின் அரசியல் மாநாடுகளுக்குச் சென்று TVK.. TVK என கத்தினால் ஓகே. அதற்கு பதிலாக அஜித் ரசிகர்கள் கும்பலோடு குட் பேட் அக்லி பார்க்கும் தியேட்டருக்குச் சென்று தவெக கோஷம் போட்ட விஜய் ரசிகர்களை அஜித் ரசிகர்கள் சூழ்ந்துக் கொண்டு அடி வெளுத்த வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்திலும் நடிகர்கள் வயலன்ஸ் சொல்லிக் கொடுப்பதால் அவர்களது ரசிகர்களும் வன்முறையை கையில் எடுத்துள்ளனர் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: "GoodBad Ugly ஓடிய தியேட்டரில் TVK, TVK என கத்திய விஜய் ரசிகர்களுக்கு தர்ம அடி. சமீபகாலமாக பொது இடங்களில் இப்படி கத்தி வருகிறார்கள். இனி அடிக்கடி தர்ம அடி வாங்கப்போவது உறுதி." என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டுள்ளார். விஜய்க்கு அஜித் ரசிகர்கள் ஓட்டுப் போட வேண்டும் என்பதற்காக நேற்று குட் பேட் அக்லி படத்துக்கு எதிராக நெகட்டிவ் டேக் கூட விஜய் ரசிகர்கள் போடவில்லை என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











