அஜித் பட தயாரிப்பாளரை ஆபாசமாக திட்டும் தல ரசிகர்கள்.. வரம்பு மீறும் ட்விட்டர் கமெண்ட்ஸ்!

சென்னை: தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் அப்டேட் கிடைக்காததால், தயாரிப்பாளர் போனி கபூரை மிகவும் ஆபாசமாக அஜித் ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

Recommended Video

Valimai Update | Boney Kapoor | Ajith | Nerkonda Parvai | Vakkeel Saab

போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீசாகி வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து, மீண்டும் அந்த கூட்டணி வலிமை படத்திற்காக இணைந்துள்ளது.

வரம்பு மீறும் அஜித் ரசிகர்கள்

வலிமை படத்தின் அப்டேட் குறித்து, இதுவரை அதன் தயாரிப்பாளர் போனி கபூர் வாயே திறக்கவில்லை என அவர் மீது அஜித் ரசிகர்கள் பயங்கர கோபத்தில் இருக்கின்றனர். அதன் வெளிப்பாடாக, சமூக வலைதளத்தில், தயாரிப்பாளர் போனி கபூரை கெட்ட வார்த்தைகளால் கமெண்ட் செய்தும் ஆபாசமான மீம்களை போட்டு திட்டியும் வருகின்றனர்.

என்ன காரணம்

இப்படி அஜித் ரசிகர்கள் திடீரென கோபத்தின் உச்சத்திற்கு செல்வதற்கான ஒரே காரணம் வலிமை படத்தின் அப்டேட் கிடைக்காதது தான். வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், நேற்று போனி கபூர், பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விட்டு மேலும் அஜித் ரசிகர்களை ஆக்ரோஷப்படுத்தியுள்ளார்.

கோபம் ஏன்

விஜய்யின் மாஸ்டர் பட அப்டேட், சூர்யாவின் அருவா பட அப்டேட், ரஜினியின் அண்ணாத்த படத்தின் அப்டேட், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், தனுஷின் ஜகமே தந்திரம், ஜெயம் ரவியின் பூமி என தொடர்ந்து மற்ற நடிகர்கள் படங்கள் குறித்த அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருக்க, வலிமை பட அப்டேட் மட்டும் வராததால், தான் ரசிகர்களின் கோபம் இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது.

கவனத்தில் கொள்வார்களா?

தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்படும், தல அஜித்தின் வலிமை படம் குறித்த ஏதாவது ஒரு அப்டேட் கிடைத்தால் போதும் என ஏங்கி நிற்கும் அஜித் ரசிகர்களின், கோரிக்கைகளை நடிகர் அஜித், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குநர் எச். வினோத் கவனத்தில் கொண்டு, விரைவில் அவர்களுக்கான அப்டேட் கொடுத்தால், தான் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட முடியும்.

ரசிகர்களும்

கோடிக்கணக்கில் பணத்தை போட்டு, தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் சில பல காரணங்களுக்காக படத்தின் அப்டேட்டை வெளியிட முடியாமல் இருக்கலாம். அல்லது உரிய நேரத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கலாம். இதனை ரசிகர்களும் கருத்தில் கொள்ள வேண்டும். அப்டேட் வேண்டும் என்ற உங்களின் உரிமையை வலிமையோடு கேளுங்கள், கெட்ட வார்த்தைகளால் ட்ரோல் செய்து உங்களின் கண்ணியத்தை இழக்காதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X