கோலிவுட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கவுள்ள ஜூலை மாதம்! வலிமை அப்டேட்டும் கூட!!
சென்னை: கொரோனா இரண்டாம் அலை மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிப்பிலிருந்து மக்கள் மெல்ல மீண்டு வரும் வேளையில் தேவைகளுக்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் சின்னத்திரை, வெள்ளித்திரை படப்பிடிப்பு பணிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக கோலிவுட் ரசிகர்களுக்கு இந்த மாதம் பல அப்டேட்கள் காத்துள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 40வது படத்தில் நடிக்கிறார். ஜூலை 12ம் தேதி இந்த படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் - கார்த்திக் நரேன்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் தனது 43வது படத்தில் நடிக்கவுள்ளார். இம்மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. ரஜினிகாந்த் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு மருத்துவ பரிசோதனைக்கு அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் இம்மாதத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நிச்சயமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்
வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் நீண்ட காலமாக தவித்து வரும் நிலையில் அவர்களின் துயரை போக்க படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & மோஷன் போஸ்டர் இம்மாதத்தில் வெளிவரவுள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











