த்ரிஷாவை மட்டுமல்ல.. விஜய்யையும் விசிலையும் விளாசிய பார்த்திபன்.. தெறிக்க விட்ட அஜித் ரசிகர்கள்!
சென்னை: கடந்த சில வாரங்களாகவே இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது விஜய் - த்ரிஷா குறித்து தான். நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் பிரபல நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் எனவே விவாகரத்து வேண்டும் என்று கேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இது தொடர்பான தகவல் வெளியான சில தினங்களில் விஜய் நடிகை த்ரிஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றாக சென்றார். அது பெரும் பரபரப்பாக மாறியது.
இது தொடர்பாக பலரும் பல கருத்துக்களை தெரிவித்தனர், நடிகர் சமுத்திரக்கனி திரைப் பிரபலங்களுடன் பேசிக் கொண்டு இருக்கையில் விஜய் மற்றும் த்ரிஷா இருவரையும் காட்டமாக விமர்சித்தார். அதேபோல் பார்த்திபன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் த்ரிஷா குறித்து தெரிவித்த கருத்துக்கு த்ரிஷா காட்டமாக பதிலடி கொடுக்க, அதற்கு பார்த்திபனும் பதிலடி கொடுத்திருந்தார்.

இப்படி இருக்கையில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் த்ரிஷா குறித்து பேசியது தொடர்பான வீடியோவானது ரசிகர்கள் எடுத்து பகிர்ந்ததே. அதே நேரத்தில் தற்போது அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கலாட்டா யூடியூப் சேனல் சார்பாக வெளியிடப்பட்ட வீடியோவில், அஜித் குறித்து கேட்ட கேள்விகளுக்கு பார்த்திபன் தனது ஸ்டைலில் அளித்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அஜித்திற்கு புகழாரம்: அதாவது, " AK 47 என்பது ஒரு தானியங்கி அது ஒரு ரஷ்ய துப்பாக்கி, AK 54 என்பது தான் இயங்க ரசிகர்கள் பயன்படுத்தாத ஒரு பீரங்கி. தேர்தல் ஆணையத்திற்கு சென்று வாங்கும் ஒரு விசிலை விட, தேர்ந்த தன் ரசிகர்கள் அடிக்கும் விசில்கள் கோடான கோடி" என்று தெரிவித்துள்ளார்.
அஜித் ரசிகர்கள்: பார்த்திபன் இவ்வாறு தெரிவித்த கருத்துக்களை அஜித் ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள், மேலும் அஜித் குறித்து பார்த்திபன் இவ்வாறு புகழ்ந்தது மட்டுமல்லாமல், விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்தது குறித்தும் அஜித் ரசிகர்கள் செலிபிரேட் செய்து கொண்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக பார்த்திபனை அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











