Don't Miss!
- Automobiles
பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த டொயோட்டா! உலகின் முதல் இடம்!
- News
காஷ்மீரில் குழந்தையாக மாறி பனிக்கட்டிகளை மண்டையில் உடைத்த ராகுல்! விடுவாரா பிரியங்கா? ஒரே சேஸிங்தான்
- Lifestyle
அரிசி நீரை வீணாக்குறீங்களா? இனிமே அப்படி பண்ணாதீங்க... அத எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம் தெரியுமா?
- Sports
சாஹலுக்கு அநீதி செய்த ஹர்திக் பாண்ட்யா.. முக்கிய வாய்ப்பை தவறவிட்டுடாரே.. கம்பீர் கடும் ஆவேசம்!
- Technology
1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
- Finance
Philips கொடுத்த அப்டேட்.. 6000 பேருக்கு பிரச்சனையா.. செய்வதறியாது தவிக்கும் ஊழியர்கள்..!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
வாரிசுக்குப் போட்டியாக துணிவு திருவிழா... போஸ்டர்களில் வெறித்தனம் செய்த அஜித் ரசிகர்கள்
சென்னை: அஜித்தின் துணிவு, விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படங்கள் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகின்றன.
விஜய், அஜித் படங்கள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் ரேஸில் களமிறங்குவதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் வாரிசு பட இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
அதேநேரம் வாரிசு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாக அஜித் ரசிகர்கள் செய்துள்ள சம்பவம் இணையத்தில் வெறித்தனமாக வைரலாகி வருகிறது.
அய்யோ அம்மா ஆடியோ லாஞ்ச்..இணையத்தில் டிராண்டாகும் மீம்ஸ்..வெச்சு செய்யும் அஜித் ரசிகர்கள்!

பொங்கல் ரேஸில் அஜித் - விஜய்
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களாக மாஸ் காட்டி வரும் அஜித், விஜய் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இருவரது படங்கள் வெளியாகும் போதும் ரசிகர்களின் உற்சாகம் விண்ணைத் தொடும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் - விஜய் இருவரும் பொங்கல் ரேஸில் களமிறங்குகின்றனர். அஜித் நடிப்பில் துணிவு திரைப்படமும், விஜய்யின் வாரிசும் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது. இதனால் துணிவு, வாரிசு படங்களுக்கான ப்ரோமோஷன் பணிகள் தீயாக நடந்து வருகின்றன.

வாரிசு ஆடியோ லான்ச்
இதனிடையே விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் உட்பட வாரிசு படக்குழுவினர் கலந்துகொண்டனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழா கடந்த இரு தினங்களாக டிவிட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. அதேநேரம் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திய வீடியோவும் இணையத்தில் வைரலானது.

களமிறங்கிய அஜித் ரசிகர்கள்
இன்னொரு பக்கம் அஜித் எப்போதும் தனது படங்களுக்கான ப்ரோமோஷனில் கலந்துகொள்வதில்லை. அதனால் வாரிசுக்குப் போட்டியாக அஜித் ரசிகர்களே துணிவு ப்ரோமோஷனை கையில் எடுத்துள்ளனர். நேற்று முழுவதும் வாரிசு ஆடியோ லான்ச், நெஞ்சில் குடியிருக்கும் போன்ற ஹேஷ்டேக்குகளை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். அதற்குப் போட்டியாக சென்னை ரோகிணி தியேட்டர் முன்பு குவிந்த அஜித் ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் துணிவு திருவிழாவை கொண்டாடி தீர்த்தனர்.

வெறித்தனமான போஸ்டர்கள்
ரோகிணி தியேட்டர் முன்பு பட்டாசுகளை கொளுத்தி ஆட்டம் போட்ட ரசிகர்கள், அங்கு ஏராளமான பேனர்களையும் வைத்துள்ளனர். அதில் விஜய்யை தாக்கியும் அஜித்தின் துணிவு படத்திற்கு மாஸ் காட்டியும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. "ஓடாத படத்திற்கு பின்னால் அணில் கூட்டத்தின் தலைவன் ஸ்டேடியத்தில், துணிவு உள்ள தலைவரின் பின்னால் வெறிகொண்ட தல ரசிகர்கள் படை ரோகிணி தியேட்டர் முன்னாள்" என போஸ்டர் ஓட்டியுள்ளனர்.
|
இது எங்க அண்ணன் படம்
மேலும், "ஆடியோ லான்ச் வச்சா தான் கூட்டம் வர இது என்ன அணில் படமா. அனொவ்ன்ஸ்மெண்ட் பண்ணாலே கூட்டம் வரும். இது எங்க அண்ணன் படம்டா. பெற்றோர்களை கைவிட்ட வாரிசுக்கு விளம்பரத்தை நம்பாமல் மோதும் துணிவு இருக்கா" எனவும் பேனர் வைத்துள்ளனர். அதேபோல் இன்னும் சில பஞ்ச் வசனங்களுடன் போஸ்டர் ஒட்டி விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். அஜித் ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள் வைரலாகி வரும் நிலையில், இப்போதே இப்படியென்றால் இரண்டு படங்களும் ஒன்றாக ரிலீஸாகும் போது என்ன நடக்குமோ என சினிமா ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.