கே டிவியில் மங்காத்தா.. டிவிட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்.. வகை வகையாக ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்ஸ்!

சென்னை: கே டிவியில் இன்று மங்காத்தா திரைப்படம் ஒளிபரப்பப்பட்டதை அஜித் ரசிகர்கள் டிவிட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக உள்ள நிலையில் அதன் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறு

திரைப்படங்கள்

திரைப்படங்கள்

திரைப்படங்கள் மட்டுமின்றி சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சீரியல் கையிருப்புகள் தீர்ந்ததால் தொலைக்காட்சி சேனல்கள் திரைப் படங்களை அள்ளிவிட்டு வருகின்றன.

சேனல்களின் படங்கள்

சேனல்களின் படங்கள்

திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிகளவு படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மக்களுக்கு பொழுது போகும் வகையில் ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களை சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்புகின்றன.

மங்காத்தா திரைப்படம்

மங்காத்தா திரைப்படம்

நேற்று சன் டிவியில் முத்து திரைப்படம் ஒளிபரப்பானது. இதனை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் அதனை டிவிட்டரில் ட்ரென்ட்டாக்கினர். இந்நிலையில் இன்று பகல் 1 மணிக்கு கே டிவியில் மங்காத்தா திரைப்படம் ஒளிபரப்பப்பானது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

டிவிட்டரில் ட்ரென்ட்

டிவிட்டரில் ட்ரென்ட்

மேலும் #Mankatha, #Thala உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளையும் அஜித் ரசிகர்கள் ட்ரென்ட்டாக்கி வருகின்றனர். இதேபோல் சன் டிவியில் அயன் படம் காலையில் ஒளிபரப்பப்பட்டதால் #ayan என்ற ஹேஷ்டேக்கும் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X