பொங்கலுக்கு ரிலீஸாகும் அஜித்தின் வலிமை.. விதவிதமான ஹேஷ்டேக்குகளால் டிவிட்டரை தெறிக்கவிடும் ரசிகாஸ்!

சென்னை: அஜித்தின் வலிமை திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய அவர், தற்போது வலிமை திரைப்படத்தை இயக்கியுள்ளார். அஜித் ஜோடியாக ஹுமா குரோஷி நடித்துள்ளார்.

வலிமை எப்போது ரிலீஸ்?

வலிமை எப்போது ரிலீஸ்?

கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வலிமை ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் வலிமை படம் எப்போது ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள்.

போனி கபூர் அறிவிப்பு

போனி கபூர் அறிவிப்பு

இந்நிலையில் வலிமை படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் அறிவித்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பல்வேறு ஹேஷ்டேக்குகளையும் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

ஹேஷ்டேக் ட்ரென்ட்டிங்கில் டாப்பில்

ஹேஷ்டேக் ட்ரென்ட்டிங்கில் டாப்பில்

#Thala #Valimai #ValimaiPongal #BoneyKapoor ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது. வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை அறிந்த இந்த ரசிகர் வீட்ல சொல்லிட்டு வந்தவன் மட்டும் பொங்கலுக்கு வா !!

க்ளாஷ விட்டு ரொம்ப நாள் ஆச்சு !! என பதிவிட்டுள்ளார்.

2022 தல பொங்கல்

2022 தல பொங்கல்

வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை அறிந்த இந்த ரசிகை 2022 நம்ம தல பொங்கல் என பதிவிட்டுள்ளார். அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் நிலையில் அஜித்தின் வலிமை படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீ வா தல..

நீ வா தல..

ரிலீஸ் தேதி நாளின அட்மாஸ்பியரை கற்பனை செய்ய முடியவில்லை. நீ வா தல.. என பொங்கலுக்கு வலிமை படம் ரிலீஸ் ஆவதை கொண்டாடியுள்ளார் இந்த நெட்டிசன்.

தல ரசிகர்களுக்கு திருவிழா

தல ரசிகர்களுக்கு திருவிழா

மற்றொரு ரசிகரான இவர், இன்று வலிமை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அடுத்தடுத்த மாதங்களில் வலிமை செகண்ட் சிங்கிள், டீசர், ட்ரெயிலர் வெளியாகும்.. இனிமேல் தல ரசிகர்களுக்கு திருவிழாதான் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X