டிக்கெட் எவ்வளவா இருந்தா என்ன..? - நாங்க கொண்டாடுவோம்

By Vignesh Selvaraj

சென்னை : சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. உலக அளவில் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் அனைத்தையும் சேர்ந்து சுமார் 2,500 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிள்ளது.

அஜித் நடிப்பில் வெளியான படங்களில் உலகளவில் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் படம் 'விவேகம்' என்ற சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறது.

சாட்டிலைட் ரைட்ஸ் :

சாட்டிலைட் ரைட்ஸ் :

மேலும், படத்தின் பொருட்செலவிற்கு தகுந்தாற் போன்று தயாரிப்பு நிறுவனமும் வியாரம் செய்துள்ளது. பட வெளியீட்டுக்கு முன்பே தொலைக்காட்சி உரிமை, இசை உரிமை, தமிழக விநியோக உரிமை, கேரள உரிமை, கர்நாடக உரிமை, தெலுங்கு உரிமை மற்றும் உலக நாடுகளின் உரிமை ஆகியவற்றின் மூலம் சுமார் 120 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தோடு அஜித் :

குடும்பத்தோடு அஜித் :

கடந்த ஞாயிற்றுக்கிழமை அஜித்தின் குடும்பத்தினர், தயாரிப்பாளர் குடும்பத்தினர் மற்றும் இயக்குநர் சிவா ஆகியோர் மட்டும் சென்னையில் உள்ள என்.எஃப்.டி.சி திரையரங்கில் 'விவேகம்' படத்தைப் பார்த்துள்ளனர். படம் முடிந்தவுடன் இயக்குநர் சிவாவை அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இருவருமே வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.

ரசிகர்கள் கொண்டாட்டம் :

பலத்த எதிர்பார்ப்புடன் வெளியான படத்தை இன்று அதிகாலைக் காட்சி முதலே ரசிகர்கள் ஆர்வமாகப் பார்த்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். சென்னை காசி தியேட்டரில் ரசிகர்களின் ஓப்பனிங் ஷோ கொண்டாட்டம் இதோ...

பாலாபிஷேகம் :

தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் ரசிகர்கள் அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர். வேலூர் அலங்கார் தியேட்டரில் தல ரசிகர்கள் அஜித் பேனருக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடிய வீடியோ...

57 கிலோ அஜித் இட்லி :

வடசென்னை வீர சென்னை அஜித் ரசிகர்கள் சார்பில் அஜித்தின் 'விவேகம்' ஸ்பெஷல் இட்லி பாரத் திரையரங்கத்தின் முகப்பில் ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

டிக்கெட் விலை :

மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்களைத் தவிர தமிழகத்தின் பல இடங்களில் டிக்கெட் விலை தாறுமாறாக விற்கப்பட்டிருக்கிறது. பல இடங்களிலும் 500 முதல் 1000 ரூபாய் வரை பணம் கொடுத்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கியிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X