15 வருஷமாயிடுச்சா.. ட்விட்டரில் ரகளை செய்யும் அஜித் ரசிகர்கள்! #15YrsOfMegaBBAttagasam
சென்னை: அட்டகாசம் படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அஜித் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான படம் அட்டகாசம். சரண் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை பூஜா நடித்திருந்தார். சுஜாதா, ரமேஷ் கண்ணா, கருணாஸ், வையாபுரி என ஒரு நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.

ஹேஷ்டேக்
இந்நிலையில் இன்றுடன் அட்டகாசம் படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் #15YrsOfMegaBBAttagasam என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட்டாக்கி வருகின்றனர்.

ட்ரென்டிங்
இந்த ஹேஷ்டேக் சென்னை ட்ரென்டிங்கில் டாப் இரண்டில் உள்ளது. அஜித் ரசிகர்கள் பலரும் அட்டகாசம் படம் குறித்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சொல்லவா வேணும்
நாங்களாம் அப்போவே அப்டி இப்ப சொல்லவா வேணும்..!! என அஜித்தின் கட்டவுட்டை மாலைகளால் அலங்கரித்திருக்கும் போட்டோவை ஷேர் செய்திருக்கிறார்.
என்ன நான் சொல்றது?
வெத்து கெத்துயெல்லாம் காட்டக்கூடாது... என்னா நான் சொல்றது.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
பூச்செடிக்கு உரமாக்கு
வெட்ட வரும் எதிரிய எருவாக்கு நீ நட்டு வச்ச பூச்செடிக்கு உரமாக்கு.. தல பேர நீ சொல்லி கொண்டாடு.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











