தியேட்டர் தெறிக்கும்...வலிமை மாஸ் பாடல்...வேற மாரி கொண்டாடும் அஜித் ரசிகர்கள்

சென்னை : மியூசிக், விஷுவல், பாடல் வரி என அனைத்தும் வேற லெவலில் தெறிக்க விடுவதாக அமைக்கப்பட்டுள்ள வலிமை படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் பாடல் மேக்கிங் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

Ajith fans celebrating valimai first single video lyric song

விக்னேஷ் சிவன் வரிகளில், யுவன் சங்கர் ராஜா இசையில் துள்ளல் ஆட்டம் போட வைக்கிறது நாங்க வேற மாதிரி பாடல். ஊக்கமளிக்கும் வகையிலும், அறிவுரை சொல்லும் விதமாக இந்த வரிகளை அஜித்திற்கு கூடுதல் மாஸாக அமைந்துள்ளது.

Ajith fans celebrating valimai first single video lyric song

நாளைக்கு நிம்மதியாக நீ இருக்க இன்னைக்கு இறங்கி செதுகிடனும் என்ற வரிகள் பலரையும் கவர்ந்துள்ளது. நட்பு, வாழ்க்கை பற்றிய கூறப்பட்டுள்ள அர்த்தமுள்ள வரிகள், அதற்கு ஏற்ற குரல் ஆகியன இந்த பாடலுக்கு மேலும் மெருகேற்றி உள்ளது.

Ajith fans celebrating valimai first single video lyric song

வேற மாரி பாடல் பற்றி டைரக்டர் வினோத் தனது ட் விட்டர் பக்கத்தில், அஜித்தின் 29 ஆண்டு கால சினிமா வாழ்க்கையின் வலிமையை சொல்லும் சிறிய கிஃப் என குறிப்பிட்டுள்ளார்.

வேற மாரி பாடல் பற்றி டைரக்டர் வினோத் தனது ட் விட்டர் பக்கத்தில், அஜித்தின் 29 ஆண்டு கால சினிமா வாழ்க்கையின் வலிமையை சொல்லும் சிறிய கிஃப் என குறிப்பிட்டுள்ளார்.

அஜித்தின் 30 ஆண்டு கால சினிமாவை கொண்டாடும் விதமாக இந்த வீடியோ பாடல் அமைக்கப்பட்டுள்ள அஜித் ரசிகர்களை அளவில்லா உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Ajith fans celebrating valimai first single video lyric song

அஜித்திற்கு பொருத்தமான வரிகள் என பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு வருகின்றனர். மீண்டும் அஜித்தின் இளமை தோற்றம், துள்ளல் ஆட்டம் ஆகியவற்றுடன், இந்த பாடலில் பங்கேற்ற கிராமிய இசை கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கைக்குலுக்கி அஜித் பாராட்டு காட்சி, ஷுட்டிங் ஸ்பாட்டில் ஓரமாக நின்று அஜித் வேடிக்கை பார்க்கும் காட்சிகள் இந்த பாடலை வேற லெவலில் ஹிட் ஆக்கி உள்ளது.

Ajith fans celebrating valimai first single video lyric song

வேற மாரி பாடல் ரிலீஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக வலிமை ஹேஷ்டாக் ட்விட்டர் டிரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அஜித்திற்காக விக்னேஷ் சிவன் எழுதிய இரண்டாவது மரண மாஸ் குத்து பாடலும் ஹிட் ஆகி உள்ளதால் விக்னேஷ் சிவனுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பிரபலங்கள், அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல விஜய் ரசிகர்கள் பலரும் இந்த பாடலை பாராட்டி, ட்வீட் செய்தும், அதிக முறை ரீட்வீட் செய்தும் வருவது அஜித் ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோஷத்தை கொடுத்துள்ளது. முதலில் உன் குடும்பத்தை பாரு என்ற வரிகள், வலிமை படம் குடும்ப சென்டிமென்ட் அதிகம் கொண்ட படம் என்பதையும் காட்டி விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X