Ajith: தொப்பைக்கு தனி லக்கேஜ்... எல்லை மீறிய ட்ரோல்... அஜித் ரசிகர்களிடம் வாங்கி கட்டிய பிரபலம்!

சென்னை: அஜித் நடிப்பில் கடைசியாக 'துணிவு' திரைப்படம் வெளியாகியிருந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார்.

இதற்காக அஜித் தனது உடல் எடையை குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதனை கலாய்த்து அஜித்தை பாடி ஷேமிங் செய்த சினிமா பிரபலத்தை ரசிகர்கள் வச்சு செய்துவருகின்றனர்.

 Ajith: Fans condemned Valai Pechu Anthanan for body shaming Ajith

அஜித் ரசிகர்களிடம் சிக்கிய பிரபலம்:கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதமே தொடங்கியிருக்க வேண்டும், ஆனால், இயக்குநர் விக்னேஷ் சொதப்பியதால், அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி கமிட்டானார். இதனால் ப்ரீ புரொடக்‌ஷன் போன்ற காரணங்களால் விடாமுயற்சி ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை.

இதனிடையே அஜித்தும் அடிக்கடி பைக் ட்ரிப் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக வெளிநாட்டில் இருந்த அஜித் நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அஜித் வெளியேறிய வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகின. ப்ளூ ஜூன்ஸ், ரெட் கலர் டீ-ஷர்ட் அணிந்தபடி செம்ம ஸ்டைலிஷாக இருந்தார் அஜித்.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகரான வலைப்பேச்சு அந்தணன் தேவையில்லாமல் அஜித்தை பாடி ஷேமிங் செய்து ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். தனது டிவிட்டரில், "அஜித்திற்கு நெருக்கமான ஒருவர், 'சார் இப்ப தினமும் வொர்க்கவுட் பண்ணி ஸ்லிம் ஆயிட்டாரு தெரியுமா?'ன்னாரு. ஏர்போர்ட்ல அஜித் வர்ற காட்சிய பார்த்தா தொப்பைக்கே தனி லக்கேஜ் போட்ருப்பாரு போல. யோவ்...ஸோர்ஸ், என்னய்யா இப்படி பண்ணிட்டே?" என கிண்டல் செய்துள்ளார்.

 Ajith: Fans condemned Valai Pechu Anthanan for body shaming Ajith

வலைப்பேச்சு அந்தணனின் இந்த டிவிட்டர் பதிவுக்கு அஜித் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். "வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோங்க... ஒரு நடிகரை பாடிஷேமிங் செய்வதெல்லாம் என்ன மாதிரியான மனநிலை" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னொரு நெட்டிசன் "நீங்க தான் பூமர் மாதிரி இருக்கீங்க... இனிமேல் அஜித்தை இப்படி பாடி ஷேமிங் செய்தால் அவ்வளவுதான்" என மிரட்டல் தொனியில் எச்சரித்துள்ளார். தொடர்ந்து மேலும் பல அஜித் ரசிகர்கள் வலைப்பேச்சு அந்தணனை ட்ரோல் செய்து வருகின்றனர்.

முன்னதாக அஜித் வெயிட் லாஸ் செய்வதற்காக அதிகமாக ஒர்க்அவுட் செய்து வருவதாக சொல்லப்பட்டது. இதனால் அஜித் முன்பைவிட ரொம்பவே ஸ்லிம்மாக காணப்படுகிறார் என கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகின. இந்த மாற்றம் எல்லாம் விடாமுயற்சி படத்துக்காக தான் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரம் நேற்று வெளியான அஜித்தின் வீடியோவில் அவர் உடல் எடையை குறைத்ததாக தெரியவில்லை எனவும் சிலர் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X