'பர்ஸ்ட் லுக் வேணும்' அடம் பிடிக்கும் அஜித் ரசிகர்கள்... டிவிட்டரில் டிரெண்டாகும் 'தல'யின் வலிமை!

By

சென்னை: வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் உருவாக்கியுள்ள ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

Thala Ajith Vera Level

அஜித்குமார் இப்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்கிறார்.

'நேர்கொண்ட பார்வை' படத்தை அடுத்து ஹெச்.வினோத் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். நடிகை ஶ்ரீதேவியின் கணவரும் பிரபல இந்திப் பட தயாரிப்பாளருமான, போனி கபூர் தயாரிக்கிறார்.

காலா நாயகி

காலா நாயகி

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் ஜோடியாக, யாமி கவுதம் நடிக்கிறார் என்றும் இலியானா நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், இதில் இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிப்பதாகக் கூறப்படுகிறது. இவர் ரஜினிகாந்தின் 'காலா' படத்தில் நடித்திருந்தார்.

ராமோஜிராவ் பிலிம்சிட்டி

ராமோஜிராவ் பிலிம்சிட்டி

இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. பின்னர் படக்குழு சென்னைத் திரும்பியது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், பிரமாண்ட செட் போடப்பட்டு படமானது. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. பின்னர் பிரசன்னா நடிப்பதாகக் கூறப்பட்டது.

வில்லனாக நவ்தீப்

வில்லனாக நவ்தீப்

இதை அவரும் எதிர்பார்த்திருந்தார். இந்நிலையில், தான் நடிக்கவில்லை என்று பிரசன்னா கூறியிருந்தார். இதற்கிடையே நடிகர் நவ்தீப் அதில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இவர் அஜித்துடன் ஏகன் படத்தில் ஏற்கனவே நடித்திருந்தார். தமிழில் அறிந்தும் அறியாமலும், உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சீறு படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

ஆக்‌ஷன் காட்சியில் விபத்து

இந்த படத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளின்போது அஜித்துக்கு காயம் ஏற்பட்டது. அப்போது இயக்குனர் உட்பட பலர் ரெஸ்ட் எடுக்குமாறு கூறியும் மறுத்துவிட்ட அஜித், காயத்துடனேயே நள்ளிரவு வரை ஷூட்டிங்கில் கலந்துகொண்டு முடித்துக் கொடுத்தார் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்நிலையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வேண்டும் என்று அஜித் ரசிகர்கள், #WeWantवलीमईValimaiFL என்ற ஹாஷ் டேக்கை உருவாக்கினர். இதை நேற்று இரவில் இருந்து டிரெண்டாக்கி வருகின்றனர். 'தல ரசிகர்கள் கர்ஜிப்பார்கள். அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார்கள் என்று கூறியுள்ள ஒரு ரசிகர், இந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X