பேட்ட பேனர் கிழிப்பு: ட்விட்டரில் துவங்கி தியேட்டரில் முடிந்த அஜித், ரஜினி ரசிகர்கள் மோதல்
சென்னை: பேட்ட பேனர்களை அஜித் ரசிகர்கள் கிழித்துள்ளனர்.
அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட ஆகிய படங்கள் இன்று ரிலீஸாகியுள்ளன. படம் ரிலீஸாவதற்கு முன்பே இருவரின் ரசிகர்களுக்கு இடையே சமூக வலைதளங்களில் மோதல் துவங்கிவிட்டது.
இந்நிலையில் இன்று தியேட்டரில் அந்த மோதல் தொடர்ந்துள்ளது.
பேட்ட
சென்னை கோயம்பேட்டில் உள்ள தியேட்டர் ஒன்றில் வைக்கப்பட்ட பேட்ட பட பேனர்களை அஜித் ரசிகர்கள் கிழித்துள்ளனர். அந்த சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

விஸ்வாசம்
கோயம்பேட்டில் உள்ள தியேட்டர் ஒன்றில் இருக்கும் 6 ஸ்கிரீன்களிலும் இன்று அதிகாலை 4 மணிக்கு பேட்ட படம் வெளியிடப்பட்டது. விஸ்வாசம் படத்தையும் 4 மணிக்கு வெளியிட வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் கூறியுள்ளனர். அதை தியேட்டர் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த கடுப்பில் அவர்கள் தியேட்டர் வளாகத்தில் இருந்த பேட்ட பேனர்களை கிழித்தனர்.

பரபரப்பு
அஜித் ரசிகர்கள் பேட்ட பேனர்களை கிழித்ததும் அவர்களுக்கும், அங்கு கூடியிருந்த ரஜினி ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோபம்
படம் ரிலீஸாகாத கோபத்தில் தல ரசிகர்கள் செய்த காரியம் பலரையும் அஜித்தை விமர்சிக்க வைத்துள்ளது. சிலர் செய்த காரியத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











