அஜித்தை தொடும் ஆசையில் தியேட்டரில் ஸ்கிரீனை கிழித்த ரசிகர்கள் #Viswasam
தேனி: தேனியில் உள்ளி தியேட்டர் ஒன்றில் திரையில் அஜித்தை பார்த்த ரசிகர்கள் உணர்ச்சி வசப்பட்டு ஸ்கிரீனை கிழித்துவிட்டனர்.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் இன்று வெளியாகியுள்ளது. விஸ்வாசம் படம் ஓடும் தியேட்டர்களில் எல்லாம் அஜித் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் காணப்படுகிறார்கள்.

அஜித் என்ட்ரி கொடுக்கும் காட்சியின்போது விசில் சத்தம் காதை கிழிக்கிறது. அவர்கள் தல மீது வைத்திருக்கும் பாசம் புரிகிறது. ஆனால் தேனி ரசிகர்கள் பாசத்தில் கொஞ்சம் ஓவராக போய்விட்டனர்.
தேனியில் உள்ள கிருஷ்ணா தியேட்டரில் விஸ்வாசம் படத்தின் காலை காட்சியை பார்க்க ரசிகர்கள் கூடினார்கள். திரையில் அஜித்தை பார்த்த ரசிகர்களால் இருக்கையில் உட்கார முடியவில்லை.
உடனே எழுந்து வந்து ஸ்கீரன் அருகே நின்று ஆட்டம் போட்டனர். அதில் சில ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் அஜித்தை தொடுகிறேன் என்று ஸ்கிரீனை கிழித்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications











