விஸ்வாசம் அப்டேட்டால் கடுப்பான தல ரசிகர்கள்

சென்னை: விஸ்வாசம் திரைப்படம் குறித்த அப்டேட் அஜித் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவித்திருந்தனர்.

அதன்படி சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

விஸ்வாசம்

விஸ்வாசம் படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு என்றதும், ரசிகர்கள் ட்விட்டரே கதி என்று காத்திருந்தனர். படத்தின் டீசர் அல்லது இரண்டாவது லுக் தொடர்பான அறிவிப்பாக இருக்குமெனப் பார்த்தால் கொட்டப்பாடி ஜே ராஜேஷின் "கேஜேஆர் ஸ்டுடியோ" நிறுவனம் விஸ்வாசம் படத்தின் தமிழக திரையரங்க உரிமையை வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கோபம்

ட்விட்டரில் காத்திருந்த ரசிகர் ஒருவர், சத்யஜோதி பிலிம்ஸ் ஏன் ரசிகர்களை கண்டுகொள்ளவில்லை எனத் தெரியவில்லை. எதாவது அப்டேட் வருமெனெ தல ரசிகர்களாகிய நாங்கள் காத்திருந்தால் இந்த தகவலை சொல்கிறார்கள். நாங்கள் "தல"க்காக மட்டும்தான் காத்திருக்கிறோம். உங்களால் ஆக்டிவா அப்டேட் கொடுக்க முடியாது என்றால் ஏன் பெரிய நடிகர்களோடு படம் பண்ணுகிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.

வேண்டாம்

இந்த அப்டேட்டை பார்த்த மற்றுமொரு தல ரசிகர், தல ரசிகர்களிடமிருந்து அன்பான வேண்டுகோள். தயவு செய்து நீங்க இனிமேல் அஜித் படத்தை தயாரிக்காதீர்கள். மற்ற தயாரிப்பாளர்கள் அவர்களுடைய படத்தை பற்றி சீரான இடைவெளியில் அப்டேட் கொடுக்கிறார்கள். நீங்கள் எரிச்சலூட்டுகிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.

கொடுங்கள்

இனிமேலாவது ரசிகர்களை சந்தோஷப்படுத்துகிற அளவுக்கு அறிவிப்பு கொடுங்கள் என மற்றுமொரு ரசிகர் கேட்டுள்ளார்.

ரிலீஸ் பண்ணு

வேதனையின் உச்சத்திற்கு சென்ற ரசிகர் ஒருவர், "இதுதான் ராஜா நீங்க சொன்ன அப்டேட்டா..? இனிமே சத்தியமா நாங்க அப்டேட் கேக்கல டா" நீ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணு. போதுண்டா எப்பா... " என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X