என்ன ஒரு அராஜகம்.. போலீஸ்காரரையே எதிர்த்து தள்ளிய அஜித் ரசிகர்கள்.. துணிவு FDFS சேட்டைகள்!
சென்னை: துணிவு படத்தை காண வந்த அஜித் ரசிகர்கள் சென்னை ரோகிணி திரையரங்கில் உள்ள கண்ணாடியை உடைத்து தள்ளி நொறுக்கிய நிலையில், அங்கே அவர்களை தட்டிக் கேட்ட போலீஸ்காரரையே பிடித்துத் தள்ளும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் இன்று அதிகாலை 1 மணியளவில் சிறப்பு காட்சியாக வெளியானது. ரோகிணி தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு காட்சியின் போது ரசிகர்களை செய்த ரகளை அந்த காட்சியையே தாமதப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், போலீஸ்காரர் ஒருவரையே அஜித் ரசிகர் பிடித்துத் தள்ளும் காட்சியும் அவரை முறைக்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.

வெறித்தனமான கொண்டாட்டம்
வாரிசு படமும் துணிவு படமும் ஒரே நாளில் வெளியான நிலையில், அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம் பெருசா அல்லது விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் பெரிதா என இரு தரப்பும் மாறி மாறி தியேட்டர்களில் வெறித்தன கொண்டாட்டங்களை நடத்தி வரும் நிலையில், ஒரு சில அசம்பாவிதங்களும் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளன.

ரோகிணி தியேட்டர் பாதிப்பு
ரசிகர்களின் கோட்டை என கொண்டாடப்படும் ரோகிணி திரையரங்கின் முகப்பு கண்ணாடி டோரை அஜித் ரசிகர்கள் உடைத்துக் கொண்டு துணிவு FDFS காட்சியை பார்க்க முண்டியடித்தனர். அங்கே போலீஸார் ஒருவர் வந்து அவர்களை மிரட்ட நினைத்த நிலையில், பதிலுக்கு அஜித் ரசிகர்கள் போலீஸ்காரரை மிரட்டும் நிலை உருவாகி விட்டது.

போலீஸ்காரரை தள்ளி விட்டு
அஜித் ரசிகர்கள் அதிகம் இருக்கும் திமிர் காரணமாக ரசிகர் ஒருவர் அந்த கூட்டத்தை களைக்க முற்பட்ட போலீஸார் ஒருவரை பிடித்து தள்ளி விட்டு முறைக்கும் காட்சிகள் ரசிகர்களை பதபதைக்க வைத்தன. அஜித் படத்தை ரசிகர்கள் கொண்டாடும் மனநிலையில், பாதுகாப்புக்காக வந்த காவலரை இப்படி செய்யலாமா என பலரும் விளாசி வருகின்றனர்.

ரசிகர்கள் அட்டகாசம்
பேனர்கள் கிழிப்பது, நாற்காலிகளை உடைப்பது என ரோகிணி தியேட்டரில் ஏகப்பட்ட அட்டகாசங்களை விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியின் போது செய்ததாக ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளும் வெளியாகி உள்ளன. இதே போல தமிழ்நாடு முழுவதும் சில திரையரங்குகளை ரசிகர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











