லோகேஷ் கனகராஜ் போட்ட அந்த ட்வீட்.. பயங்கர கடுப்பில் அஜித் ரசிகர்கள்.. என்ன விஷயம் தெரியுமா?

சென்னை: நேற்று தொடங்கிய கமலின் விக்ரம் படத்தின் அப்டேட் கூட வந்துடுச்சு, கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கடந்தும் வலிமை அப்டேட் அதிகாரப்பூர்வமாக வரவில்லையே என அஜித் ரசிகர்கள் பயங்கர கடுப்பில் உள்ளனர்.

மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட அஜித் ரசிகர்கள் தயாரிப்பாளர் போனி கபூரை கண்டபடி திட்டி ட்வீட் போட்டு ட்ரோல் செய்துள்ளனர்.

வரும் ஜூலை 15ம் தேதி வலிமை ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்பதை கூட இன்னமும் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி என்ன ட்வீட்

அப்படி என்ன ட்வீட்

இன்று மாலை 5 மணிக்கு கமல் நடிப்பில் உருவாகவுள்ள விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் போட்ட ட்வீட் தான் அஜித் ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது. பீஸ்ட், விக்ரம் என லேட்டஸ்ட்டாக தொடங்கி இருக்கும் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரும் நிலையில், 600 நாட்களாக காத்திருக்கும் தல ரசிகர்கள் காண்டாகத்தானே செய்வார்கள்.

வயிறு எரியுது

வயிறு எரியுது

சமூக வலைதளத்தில் அஜித், விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கு இடையே கடும் சண்டையே லோகேஷ் கனகராஜின் ட்வீட்டுக்கு கீழ் நடைபெற்றுள்ளது. நண்பர் ஆர்மி வயிறு எரிகின்றனர் என விஜய் ரசிகர் ஒருவர் போட்டுள்ள ட்வீட்டுக்கு அஜித் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

எங்க நிலைமை

எங்க நிலைமை

இப்ப எடுக்க ஆரம்பிச்ச கமல் படத்தின் அப்டேட் கூட வந்துடுச்சு.. ஆனால், எங்க படத்தோட நிலைமைய பார்த்தீங்களா சார் என அஜித் ரசிகர்கள் புலம்பித் தள்ளுவதாக சூர்யா ரசிகர் ஒருவர் ட்ரோல் செய்திருக்கும் ட்வீட்டும் எரிகிற நெருப்பில் எண்ணெய் அள்ளி ஊற்றுவது போல உள்ளது.

தளபதியன்ஸ் சப்போர்ட்

தளபதியன்ஸ் சப்போர்ட்

மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக உலகநாயகன் கமலின் விக்ரம் படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தின் டெஸ்ட் ஷூட் நடந்து முடிந்த நிலையில், வெறித்தனமான ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இன்னா தளபதியன்ஸ் நம்ம சப்போர்ட்ட காட்டுவோமா என விஜய் ரசிகர்கள் ஃபர்ஸ்ட் லுக்கை டிரெண்ட் செய்ய முடிவு செய்துள்ளனர்.

மரண கலாய்

மரண கலாய்

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் வைரல் போட்டோ மீமை போட்டு.. யார் யாருக்கோ நல்லது நடக்குது.. உங்களுக்கு ஒரு நல்லது நடக்க மாட்டேங்குதே தம்பி என மற்ற நடிகர்கள் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை கிண்டல் செய்வது போல மரண கலாயாக உள்ளது இந்த மீம்.

நம்ம பக்கம் திரும்புமே

நம்ம பக்கம் திரும்புமே

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ட்வீட்டை பார்த்துட்டு அப்படியே நம்ம பக்கம் திரும்புறாங்களே என அஜித் ரசிகர்கள் கரிகாலன் சர்கஸ் வடிவேலு நிலைமைக்கு தள்ளப் பட்டு இருக்காங்கன்னு வச்சு செய்து வருகின்றனர்.

Recommended Video

Yogi Babu Cricketer Natarajan சந்திப்பில் நடந்த செம்ம கலாட்டா | IPL
தலைவன் வருவான்

தலைவன் வருவான்

இப்போ கலாய்க்குற வாயெல்லாம் ஜூலை 15 தல ரசிகர்கள் செய்யப் போற சம்பவத்தை பார்த்து அலற போறாங்க.. ஜூலை 15 தலைவன் போனி கபூர் கெத்தா வருவான் என அஜித் ரசிகர்கள் முழு நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பார்த்து செய்யுங்க போனி கபூர்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X