இந்திய அரசின் ட்ரோன்களை தயாரிக்க தேர்வான தக்‌ஷா டீம்.. சந்தோஷத்தில் அஜித் ரசிகர்கள்!

சென்னை: சினிமா மட்டுமின்றி மற்ற துறைகளிலும் அசத்தி வருகிறார் நடிகர் அஜித். அவரது வழிகாட்டுதல் பேரில் உருவாக்கப்பட்ட தக்‌ஷா டீம் இந்திய அரசின் ட்ரோன்களை தயாரிக்க தேர்வாகி உள்ளது.

இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நடிகர் அஜித்தின் சாதனைகளை பட்டியலிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சென்னை ஐஐடி மாணவர்களுக்கும் அண்ணா பல்கலைக் கழக மாணவர்களுக்கும் இவர் ட்ரோன் உருவாக்கும் பயிற்சிகளை கொடுத்திருக்கிறார்.

ஆல் இன் ஆல் அஜித்

ஆல் இன் ஆல் அஜித்

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் அஜித். நடிப்பை தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராஃபி, சமையல், துப்பாக்கி சுடுதல், ட்ரோன்கள் என ஏகப்பட்ட திறமைகளையும் தன்னுள் கொண்டடு ஆல் இன் ஆல் அஜித்தாக வலம் வருகிறார். இந்நிலையில், நடிகர் அஜித் ஆலோசகராக இருந்த தக்‌ஷா டீம் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளது.

தக்‌ஷாவுக்கு அங்கீகாரம்

தக்‌ஷாவுக்கு அங்கீகாரம்

இந்திய அரசின் புதிய ட்ரோன்களை தயாரிக்கும் பொறுப்பு தக்‌ஷா டீமுக்கு கிடைத்துள்ளது. தக்‌ஷா உடன் சேர்ந்து மொத்தம் 5 நிறுவனங்களுக்கு இந்த வாய்ப்பை இந்திய அரசு வழங்கி உள்ளது. இந்த செய்தியை அறிந்த அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதனை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில்

கொரோனா காலத்தில்

கொரோனா பரவல் காலத்தில் நடிகர் அஜித்தின் மேற்பார்வையில் உருவான இந்த தக்‌ஷா டீம் பல தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு சென்று கிருமிநாசினிகளை தூவி பொது சேவையில் சிறப்பாக செயல்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய மெடிக்கல் எக்ஸ்பிரஸ் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது பரிசை தட்டிச் சென்றது.

கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்

கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்

ரீல் நாயகனாக மட்டுமில்லாமல், ரியல் நாயகனாகவும் நடிகர் அஜித் இதுபோன்ற பல சாதனைகளை செய்து வருவதால் அஜித் ரசிகராக உள்ளோம் என தக்‌ஷா டீமுக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்திற்கு நடிகர் அஜித்தின் பங்கும் முக்கிய காரணம் என்பதை உணர்ந்து கொண்டு அஜித் ரசிகர்கள் சந்தோஷத்தில் கொண்டாடி வருகின்றனர்.

ஏகே 61ல் பிசி

ஏகே 61ல் பிசி

வலிமை படத்தைத் தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில், எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். சென்னை மவுண்ட் ரோடு செட்டை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக போடப்பட்டு அதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X