twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜீத் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து ஹேப்பி நியூஸ்!

    |

    சென்னை: அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அவர்களை மேலும் குஷியில் ஆழ்த்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வந்துள்ளன.

    விவேகம் படத்தின் தோல்வியினால் வருத்தத்தில் இருந்த தனது ரசிகர்களை விஸ்வாசம் படத்தின் வெற்றியின் மூலம் சந்தோஷப்படுத்தினார் அஜித். பொங்கலுக்கு வெளியான இப்படம் வசூலை வாரி குவித்ததோடு அனைத்து தரப்பினரும் கொண்டாடும் படமாகவும் அமைந்தது.

    Ajith fans have reason to be happy

    அவரது அடுத்த படம் யாரோடு இருக்கும் என கோலிவுட்டே எதிர்பார்த்த நிலையில், தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய ஹெச். வினோத் தான்,அஜித்தின் அடுத்த பட இயக்குனர் என்ற அறிவிப்பு வெளியானது.

    ஸ்ருதி ஹாஸனுக்கு அடித்தது ஜாக்பாட்: ஹாலிவுட் செல்கிறார் ஸ்ருதி ஹாஸனுக்கு அடித்தது ஜாக்பாட்: ஹாலிவுட் செல்கிறார்

    அதுவும் இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்கில், அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடிக்க போகிறார் என்றதும் அவரது ரசிகர்களின் மகிழ்சிக்கு அளவே இல்லை. நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.

    இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அஜித்தின் பிறந்த நாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு பின் ஒரே ஆண்டில் இரு அஜித் படங்கள் வெளியாகவுள்ளன. கடைசியாக 2015-ம் ஆண்டு என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய படங்கள் வெளியாகின.

    வருடத்தின் தொடக்கத்திலேயே விஸ்வாசம் படத்தின் வெற்றியினால் மகிழ்ச்சியாயிருந்த அஜித் ரசிகர்களிக்கு இதே ஆண்டில் அடுத்த படமும் வெளியாகும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்த நிலையில், அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி மேலும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

    இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்க ஹெச்.விநோத் இயக்குகிறார். இந்த படத்திற்கான பூஜை, ஆகஸ்டு 29 -ம் தேதி நடக்கிறது. அஜித் முற்றிலும் மாறுபட்டு தோன்றும் இந்த புதிய படம் அடுத்தாண்டு, ஏப்ரல் 10 -ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

    இதற்கெல்லாம் மேலாக ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகுமென கூறப்ப்ட்ட நேர்கொண்ட பார்வை தற்போது முன்னதாகவே ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்தடுத்து வந்துள்ள இந்த 3 அறிவிப்புகளால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்கு முக்காடியுள்ளனர்.

    English summary
    Ajith fans are getting some positive vibes from the production house of the star.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X