Ajith: “அஜித்தின் அரசியல் என்ட்ரி இப்படித்தான் இருக்கும்..” ட்ரெண்டாகும் ப்ரோமோ வீடியோ!!

சென்னை: அஜித் தற்போது தனது 62வது படமான விடாமுயற்சி ஷுட்டிங்கில் பிஸியாக காணப்படுகிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சில தினங்களாக அஜித்தின் AI போட்டோஸ் இணயத்தை கலங்கடித்து வந்தன.

 Ajith: Fans have released a video of Ajith entering politics

இந்த வரிசையில் அஜித்தின் அரசியல் என்ட்ரி எப்படி இருக்கும் என அவரது ரசிகர்கள் ப்ரோமோ வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அஜித்தின் அரசியல் என்ட்ரி
கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித்துக்கு, கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அஜித் தனது ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டாலும், அவரது படங்கள் வெளியாகும் போது தரமான ஓபனிங் கிடைத்து வருகிறது. அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு, பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து மாஸ் காட்டியது.

இதனையடுத்து ஏகே 62 படத்தில் கமிட்டானார் அஜித். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து வருகிறதாம். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படம் தரமான ஆக்‌ஷன் ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. விடமுயற்சியை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 Ajith: Fans have released a video of Ajith entering politics

அஜித்தின் வெறித்தனமான ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி, கடந்த மாதம் வெளியாகி 100 கோடி வசூலித்தது. அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகவுள்ள ஏகே 63 படத்தின் அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அஜித்தின் AI போட்டோஸை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

ராஜராஜ சோழன், கேங்ஸ்டர் என வெரைட்டியாக அஜித்தின் புகைப்படங்கள் வைரலாகின. இந்நிலையில், அஜித் அரசியலில் களமிறங்க வேண்டும் என அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். விஜய் தனது பெயரிலேயே 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். அதன்மூலம் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் விஜய், விரைவில் அரசியலில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், அஜித்தையும் மக்கள் தலைவனாக பார்க்க வேண்டும், அதற்காக அவர் அரசியலில் என்ட்ரியாக வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த ஆசையை பேச்சோடு நிறுத்தாமல், அஜித்தின் அரசியலில் களமிறங்கினால் எப்படி இருக்கும் என ஒரு வீடியோவே வெளியிட்டுள்ளனர். அதில், ஐயா படத்தில் வரும் "ஐயா துரை நீ பல்லாண்டு வாழனும்" என்ற பாடல் பின்னணியில் அஜித்தை மாஸ் லீடராக ப்ரோமோட் செய்துள்ளனர்.

 Ajith: Fans have released a video of Ajith entering politics

அதாவது, அஜித் மக்கள் முன் பேசுவதாகவும், இளைஞர்கள் விரும்பும் அரசியல் தலைவனாக வலம் வருவதை போல AI டெக்னாலஜியில் வீடியோவாக கிரியேட் செய்துள்ளனர். இந்த வீடியோவில் உள்ள அஜித்தை பார்த்தால், ரியல் பொலிட்டிக்கல் லீடர் போல் செம்ம மாஸ் காட்டியுள்ளார். இதனையடுத்து இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X