Leo Release - நாளை லியோ ரிலீஸ்.. விஜய் ரசிகர்களை வலிமையுடன் உரசி பார்க்கும் அஜித் ரசிகர்கள்

சென்னை: Leo Release (லியோ ரிலீஸ்) லியோ படம் நாளை ரிலீஸாகவிருக்கும் சூழலில் அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை உரசி பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

கோலிவுட்டில் ரொம்பவே எதிர்பார்ப்பில் இருக்கும் படமான லியோ நாளை ரிலீஸாகவிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு இந்தப் படத்தை இயக்கியிருப்பதாலும் மீண்டும் விஜய்யுடன் கைகோர்த்திருப்பதாலும் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற ஆணித்தரமான நம்பிக்கையில் இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

Ajith fans have started clashing with Vijay fans the release of Leo movie tomorrow

நாளை திருவிழாதான்: லியோ படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியதிலிருந்தே ரசிகர்கள் மும்மரமாக டிக்கெட்டுகளை புக் செய்தனர். ஒரு வாரத்துக்கு பெரும்பாலான தியேட்டர்களில் படம் ஹவுஸ்ஃபுல் என்று கூறப்படுகிறது. எனவே ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை லியோ படம் ரிலீஸான வெகு சில நாட்களிலேயே முறியடித்துவிடும் என்று கணிக்கப்படுகிறது. நாளைய தினத்தை விஜய் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாட தயாராக இருக்கின்றனர்.

பிரச்னை எல்லாம் ஓவர்: நா ரெடிதான் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானதிலிருந்தே படத்தை சுற்றி ஏகப்பட்ட பிரச்னைகள் எழுந்தன.உச்சக்கட்டமாக படத்துக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு காட்சிக்கான நேர பிரச்னை இருந்தது. எப்படியாவது அதிகாலை காட்சிக்கோ இல்லை காலை 7 மணி காட்சிக்கோ அனுமதியை வாங்கிவிட வேண்டுமென்ற முயற்சியில் பட தயாரிப்பு நிறுவனம் இறங்கினாலும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. எனவே 9 மணிக்கு படம் ரிலீஸாகிறது.

ரோகிணியிலும் லியோ: இதற்கிடையே விஜய் ரசிகர்களின் கோட்டை என்று கூறப்படும் சென்னை ரோகிணி தியேட்டரில் லியோ திரையிடப்படாது என அறிவிப்பு வெளியானது. ஒருவழியாக அந்தப் பிரச்னையும் தீர்க்கப்பட்டு நாளை அங்கும் லியோ ரிலீஸாகிறது. இந்த அறிவிப்பை பார்த்தவுடன் டிக்கெட் வாங்குவதற்காக விஜய் ரசிகர்கள் தங்களது கோட்டைக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

உரசும் அஜித் ரசிகர்கள்: இப்படி தங்களை சுற்றி இருந்த அத்தனை பிரச்னைகளையும் தீர்த்துவிட்டு நாளைக்காக காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். இந்நிலையில் அஜித் ரசிகர்கள் புதிதாக கோதாவில் குதித்திருக்கின்றனர். அதாவது வலிமை படம் தமிழ்நாட்டில் 950 ஸ்க்ரீன்களில் வெளியானது. ஆனால் லியோவோ 850 ஸ்க்ரீன்களில்தான் ரிலீஸாகிறது. இந்த விஷயத்தில் வலிமையிடம் லியோ தோற்றுவிட்டது என்று சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்தனர்.

இதற்கு பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்கள் எத்தனை ஸ்க்ரீன்களில் ரிலீஸ் ஆகிறது என்பது முக்கியமில்லை படம் ஹிட்டாகிறதா என்பதுதான் முக்கியம். வலிமை எல்லாம் ஹிட்டே இல்லை. அதனால் வலிமையை தூக்கிக்கொண்டு லியோவை உரசாதீர்கள் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X