அப்டேட் எதுவும் இல்லை.. இது தாண்டா அப்டேட்.. பேனர் வைத்து அலறவிடும் அஜித் ரசிகர்கள்!
சென்னை: வலிமை படத்தின் அப்டேட் தொடர்பாக அஜித் ரசிகர்கள் வைத்துள்ள பேனர் கவனத்தை பெற்றுள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்த நடிகர் அஜித், இயக்குநர் ஹெச் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் இணைந்துள்ள படம் வலிமை.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில் லாக்டவுன் காரணமாக தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

அப்டேட்டுகள் இல்லை
இருப்பினும் ரிலாக்ஸேஷன்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. ஆனால் படம் தொடர்பான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

அலுத்துப்போன ரசிகர்கள்
படத்தின் அப்டேட்டை கேட்டு கேட்டு ரசிகர்கள் அலுத்து போய்விட்டனர். அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரிடமும் வலிமை படத்தின் அப்டேட் கேட்ட நச்சரித்தனர் ரசிகர்கள்.

அஜித் வருத்தம்
இதனால் நொந்துப்போன அஜித் தன்னுடைய ரசிகர்கள் என்று சிலர் பிரபலங்களிடம் அப்டேட் கேட்பது வருத்தமளிப்பதாக கூறினார். சரியான நேரத்தில் படக்குழு வெளியிடும் என்றும் கூறியிருந்தார்.

தள்ளி வைக்கப்பட்ட அப்டேட்
இதனை தொடர்ந்து கடந்த மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்தநாளில் வலிமை படத்தின் அப்டேட் வெளியாகும் அறிவிப்பு வெளியானது. ஆனால் அப்போது கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்ததால் அப்டேட் வெளியிடப்படுவது தள்ளி வைக்கப்பட்டது.

அடங்காத அஜித் குரூப்
இந்நிலையில் மதுரையில் அஜித் ரசிகர்கள் வைத்துள்ள பேனர் ஒன்று ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அதாவது அப்டேட் எதுவும் இல்லை. இதுதான் டா அப்டேட் என்ற வாசகத்துடன் கூடிய பேனரை வைத்துள்ளனர் அடங்காத அஜித் குரூப் என்ற ரசிகர்கள்.

என்னய்யா பேனர் வச்சுட்டீங்க?
இந்த பேனர் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், என்னய்யா இப்படி பேனரே வச்சுட்டீங்க என்று கேட்டு வருகின்றனர். இந்த பேனர் இமேஜ் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











