Ajith fans supports Vijay: அதுவேற.. இதுவேற.. லியோ ஆடியோ லாஞ்ச் ரத்து.. அஜித் ரசிகர்கள் ஆறுதல்!

சென்னை: சமூக வலைதளங்களில் பாக்ஸ் ஆபிஸ் காரணமாக விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சண்டை போட்டாலும் ஒரு பெரிய நடிகரை டார்கெட் செய்து காலி பண்ண நினைத்தால் அஜித் ரசிகர்கள் கண்டிப்பாக துணை நிற்போம் என ஏகப்பட்ட அஜித் ரசிகர்களும் தங்கள் ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.

லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து என நேற்று இரவு தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் பெரிய இடியை தலையில் இறக்கியது.

Ajith fans lends their support to Vijay after heard about Leo Audio Launch cancelled

உடனடியாக துடித்துப் போன விஜய் ரசிகர்களுக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாமல், பல அஜித் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து உண்மையான அஜித் ரசிகர்கள் என நிரூபித்து வருவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

அதுவேற.. இதுவேற: அஜித் பெரிய ஆளா இல்லை விஜய் பெரிய ஆளா என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் தொடர்ந்து சண்டை போட்டு வருவது எல்லாம் வேற டிபார்ட்மென்ட் என்றும் இந்த ஆண்டு விஜய் படமான லியோ ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறாமல் போக பல சூழ்ச்சிகள் காரணமாக இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், விஜய் ரசிகர்களின் சோகத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் என அஜித் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் ரசிகர்கள் ஆதரவு: ரசிகர்கள் சண்டையை ஒரு ஓரமாக வைத்து விட்டு இந்த இக்கட்டான நேரத்தில் விஜய்க்கும் லியோ படத்துக்கும் அஜித் ரசிகர்கள் சார்பாக ஆதரவை தெரிவிக்க வேண்டியது நமது கடமை என அஜித் ரசிகர்கள் பதிவிட்டுள்ள ட்வீட்டுக்கு ஏகப்பட்ட விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

திட்டமிட்டப்படி ரிலீஸாகுமா லியோ?: லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கே அனுமதி அளிக்கப்படாத நிலையில், நிச்சயம் லியோ படத்திற்கு அதிகாலை காட்சி இருக்காது என்றும் லியோ படத்தின் ரிலீஸுக்கும் சென்சார் உள்ளிட்ட ஏகப்பட்ட வகையில் சிக்கல்கள் வரும் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், திட்டமிட்டப்படி லியோ திரைப்படமே வெளியாகுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X