ஏகே61 அப்டேட்: விராட் கோலி சதத்துடன் ஒப்பிட்டு.. போனி கபூருக்கு போஸ்டர் அடித்த அஜித் ரசிகர்கள்!

சென்னை: வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் அலைந்தது போல தற்போது ஏகே61 படத்தின் அப்டேட் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

படத்திற்கு பூஜை போட்டு 197 நாட்கள் ஆகிவிட்டது மற்ற நடிகர்கள் ரசிகர்களுக்கு எல்லாம் அப்டேட் வருது, எங்களுக்கு மட்டும் ஏன் இப்படியொரு தண்டனை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில், விராட் கோலியே சதம் அடித்து விட்டார், ஆனால், நீங்கள் ஏன் இன்னும் அப்டேட் கொடுக்கவில்லை என போஸ்டரே அடித்து விட்டனர்.

போனி கபூருக்கு 3 படங்கள்

போனி கபூருக்கு 3 படங்கள்

இங்கிலீஷ் விங்கிலிஷ் படத்தில் கேமியோவாக நடித்த அஜித்திடம் மறைந்த நடிகை ஸ்ரீதேவி வைத்த கோரிக்கையின் பெயரில் அவரது கணவர் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க அஜித் சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. பாலிவுட்டை தாண்டி தென்னிந்தியா பக்கம் கவனத்தை திருப்பிய போனி கபூர் நேர்கொண்ட பார்வை, வலிமை, ஏகே 61 என அஜித்தின் மூன்று படங்களை தயாரித்து வருகிறார்.

முறையான அப்டேட் கொடுப்பதில்லை

முறையான அப்டேட் கொடுப்பதில்லை


அஜித் போன்ற ஒரு நடிகருக்கு படம் பண்ணுவது சாதாரண காரியம் இல்லை. அவரது ரசிகர்களை எந்தளவுக்கு தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் வைத்திருக்கிறார்களோ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் அந்த அளவுக்கு வசூல் வேட்டையை நடத்தும். ஆனால், போனி கபூர் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் ஏகே61 என எந்த படத்திற்கும் முறையான அப்டேட் கொடுப்பதில்லை என அஜித் ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

படப்பிடிப்பு நிறுத்தமா

படப்பிடிப்பு நிறுத்தமா

தயாரிப்பாளர் போனி கபூர் மொத்த பணத்தையும் போட்டு படம் எடுப்பதில்லை என்றும், மதுரை அன்புச்செழியன் போன்ற பைனான்ஸியர்களிடம் பணம் வாங்கித்தான் படம் எடுத்து வருகிறார் என சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் அன்புச்செழியன் வீட்டில் நடத்தப்பட்ட ரைடு காரணமாக பண விநியோகம் முற்றிலும் முடக்கப்பட்டு ஏகே61 படத்தின் படப்பிடிப்பே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

ஹீரோயினுடன் டூர்

ஹீரோயினுடன் டூர்

அதற்கு ஏற்றார்போல நடிகர் அஜித்தும் படப்பிடிப்பை முடிக்காமல் அடிக்கடி வெளிநாடுகளுக்கும், இமய மலைக்கும் பைக் டூர் கிளம்பி விடுகிறார். இந்த முறை ஏகே61 படத்தின் நாயகி மஞ்சு வாரியரையும் அழைத்துக் கொண்டு அஜித் பைக் டூர் சென்ற புகைப்படங்களும், வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

197 நாள் போஸ்டர்

197 நாள் போஸ்டர்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்கள் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. ஆனால், வங்கி கொள்ளையை மையமாக வைத்து ஹெச். வினோத்தின் கதையில் உருவாகி வரும் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அப்படி இருந்தும் இன்னும் ஃபர்ஸ்ட் லுக் கூட ஏன் வெளியிடவில்லை என்கிற கோபத்தில் போனி கபூர் போட்டோ போட்டு ஏகே 61 ஆரம்பித்து 197 நாள் ஆகுது ஒரு அப்டேட் கூட இல்லை என போஸ்டர் அடித்துள்ளனர்.

விராட் கோலியே சதம் அடித்து விட்டார்

விராட் கோலியே சதம் அடித்து விட்டார்

1020 நாட்களுக்கு பிறகு விராட் கோலியே சதம் அடித்து சாதனை படைத்து விட்டார். ஆனால், எங்களுக்கு இன்னும் ஏகே61 டைட்டிலோ, அல்லது ஃபர்ஸ்ட் லுக்கோ வெளியாகவில்லையே என அஜித் ரசிகர்கள் போனி கபூரை திட்டித் தீர்த்து வருகின்றனர். உங்களுக்கும் 1020 நாட்கள் கழித்து அப்டேட் கிடைக்கும் என விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X