விஜய் பிறந்தநாளில் டிரெண்டிங்கான #என்றும்_தலஅஜித்.. வெறித்தனமாக சண்டை போடும் தல - தளபதி ரசிகாஸ்!

விஜய் பிறந்தநாளான இன்று '#என்றும் தல அஜித்' ஹேஷ்டேகை டிரெண்டிங்காக்கியுள்ளது.

சென்னை: விஜய் பிறந்தநாளில், '#என்றும் தல அஜித்' ஹேஷ்டேகை டிரெண்டிங்காக்கியுள்ளனர் அஜித் ரசிகர்கள்.

எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், போல் விஜய் - அஜித் ரசிகர்கள் இடையேயும் எப்போதுமே மோதலும், சண்டையும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அதுவும் இன்றைய டிஜிட்டல் உலகில், டிரெண்டிங் சண்டை தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

விஜய் ரசிகர்கள் ஒரு விஷயத்தை டிரெண்ட்டாக்கினால், அதற்கு போட்டியாக அஜித் ரசிகர்கள் வேறொரு விஷயத்தை டிரெண்டாக்குவார்கள். நேசமணி விவகாரத்தில் மட்டும் அனைவரும் ஒன்றிணைந்து, வடிவேலுவை உலகளவில் டிரெண்டாக்கினார்கள்.

விஜய் பிறந்தநாள்

விஜய் பிறந்தநாள்

இந்த நிலையில், விஜய்யின் 45வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகிறார்கள். பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் நேற்று வெளியானதால், விஜய் ரசிகர்கள் அதனை டிரெண்டாக்கினார்கள். இன்று காலை வரை விஜய் தொடர்பான ஹேஷ்டேக்குகள் தான் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதல் நான்கு இடங்களை பிடித்து வந்தது.

அஜித் ரசிகர்கள்

அஜித் ரசிகர்கள்

ஆனால் மதியத்திற்கு மேல் #என்றும்_தலஅஜித் ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக, அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக செயல்பட்டு இந்த ஹேஷ்டேகை டிரெண்டிங்காக்கியுள்ளனர்.

மீண்டும் போட்டி

மீண்டும் போட்டி

#என்றும்_தலஅஜித் ஹேஷ்டேக்குக்கு போட்டியாக, #happybirthdayTHALAPATHY எனும் ஹேஷ்டேகை டிரெண்டிங்காக்கி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். ஆனால் அது தற்போது மூன்றாவது இடத்தில் தான் உள்ளது.

டிரெண்டிங் சண்டை

டிரெண்டிங் சண்டை

விஜய் - அஜித் ரசிகர்களிடையேயான இந்த டிரெண்டிங் சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் விஜய் பிறந்தநாள் அன்று தல ரசிகர்கள் இப்படி செய்துள்ளது அஜித்துக்கு நிச்சயம் பிடிக்காத காரியம் என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும், ரசிகர்களை யார் கட்டுப்படுத்த முடியும். பொறுத்திருந்து பார்ப்போம் இந்த டிரெண்டிங் சண்டை எங்கு போய் முடிகிறது என்பதை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X